மொத்தமாக மாறுகிறது பட்ஜெட்..
.. மொத்தமாக மாறுகிறது பட்ஜெட்..
சென்னை: தமிழ்நாட்டில் புதிய அரசு பதவி ஏற்று இருக்கும் நிலையில், பட்ஜெட் எப்படி இருக்கும், என்னென்ன மாற்றங்கள் இருக்கும் என்று நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
கொரோனா காலம் என்பதால் தமிழ்நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் உள்ளது. கடந்த ஆட்சியில் வாங்கப்பட்ட கடன், அதிக செலவு, தவறான பொருளாதார கொள்கை என்று பல்வேறு காரணங்களால் தமிழ்நாடு பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
இந்த நிலையில்தான் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட் அதிக கவனம் பெற்றுள்ளது. நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் என்ன மாதிரியான பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஐடியா இல்லை
அதன்படி தமிழ்நாட்டில் நிதியை மீண்டும் பெருக்குவதற்கு எந்த காலத்திலும் அரசு நிறுவனங்களை தனியாரிடம் ஒப்படைக்க மாட்டோம் என்று பிடிஆர் கூறியுள்ளார். கையில் காசு இல்லை என்பதற்காக அரசு நிறுவனங்களை தனியாருக்கு கொடுத்து நிதி திரட்டுவது தவறான செயல். அது மேலும் சிக்கலை ஏற்படுத்தும். இந்த பட்ஜெட்டில் சில அடிப்படை விஷயங்கள் மீது கவனம் செலுத்துவோம்.
அடிப்படை
வருமானம், செலவினங்கள் குறித்த அடிப்படை கொள்கையை மாற்றுவோம். அதேபோல் நில மேலாண்மை கொள்கையில் மாற்றம் ஏற்படும் வகையில் கண்டிப்பாக பட்ஜெட்டில் அம்சங்கள் இடம்பெறும். ஜிஎஸ்டியில் திருத்தம் கொண்டு வரும் வரை, எந்த ஒரு விஷயத்தையும், பெட்ரோல் உட்பட புதிதாக எதையும் ஜிஎஸ்டிக்கு கீழ் கொண்டு வர மாட்டோம்.
பட்ஜெட்
அடிப்படை மாற்றங்களை கொண்டு வரும் வகையில் இந்த பட்ஜெட் இருக்கும். வெளிவரவுள்ள தமிழ்நாடு பட்ஜெட் முதல்வர் ஸ்டாலின் அவர்களின் தொலைநோக்கு பார்வையுடன் உருவாகிறது. எனவே PTR பட்ஜெட் என்ற கூற்று தவறு. இதை பிடிஆர் பட்ஜெட் என்று சொல்ல கூடாது. எல்லாம் முதலமைச்சர் பட்ஜெட்தான்.
முன்பு என்ன நடந்தது
இதற்கு முன்பு அமைச்சர்கள் பட்ஜெட் எழுதும் போது ஐஏஎஸ் அதிகாரிகளை வைத்து பட்ஜெட் எழுதுவார்கள். ஆனால் இம்முறை வழக்கத்திற்கு மாறாக IAS அதிகாரிகள் எழுதி தரும் பட்ஜெட்டுக்கு மாற்றாக ஒரு அரசியல்வாதி எழுதியதாக இருக்கும். முழுக்க முழுக்க நானே இந்த பட்ஜெட்டை இந்த முறை எழுதுவேன், என்று நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
நன்றி: ஒன் இந்தியா தமிழ்
Comments