மணத்தக்காளி கீரை...

 பல மருத்துவ குணங்களை கொண்டதா இந்த மணத்தக்காளி கீரை...!!!





👉வாய்ப்புண், வயிற்றுப்புண்களை ஆற்றும் ஆற்றல் படைத்தது மணத்தக்காளிக் கீரை, கையளவு கீரையை எடுத்து வாயில் போட்டு மெல்ல வாய்ப்புண்கள், நாக்குப் புண்கள் ஆறும். 


👉வெறும் கீரையை உண்டாலே வாய்ப்புண்கள் ஆறும். சிறிது மஞ்சள் பொடியை சேர்த்து கீரையை வேகவைத்து உண்டால் புண்கள் சீக்கிரம் ஆறும். 


👉வாய்ப்புண் உள்ளபோது மணத்தக்காளி, சிறிது சீரகம், ஒரு மிளகாய் வற்றல் சேர்த்து எண்ணெய்யில் வதக்கி, தண்ணீர் சேர்த்து வேகவைத்து, பிறகு அதில் தேங்காய்ப்பால் சேர்த்து வேகவைத்து உண்டால் வாய்ப்புண் உடனே குணமாகும். 


👉காய், கீரை இரண்டையும் உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் சூட்டை தணிக்கும். உடல் குளிர்ச்சியடையும். ஒரு கைப்பிடி அளவு கீரையுடன் ஒரு ஸ்பூன் பார்லி, நான்கு சிட்டிகை மஞ்சள் பொடி சேர்த்து கஷாயமாக செய்து குடித்து வர சிறுநீர் நன்கு பிரியும். நீர்க்கடுப்பு, எரிச்சல் குணமாகும். 


👉கப நோய்களுக்கும் நல்ல மருந்தாகும். கப நோய்கள் தீர, ஒரு கைப்பிடி மணத்தக்காளிக் கீரையை எடுத்து 10 மிளகு, 3 திப்பிலி, 4 சிட்டிகை மஞ்சள் பொடி கலந்து விழுதாக அரைத்து, அதில் தேன் கலந்து சாப்பிட்டால் சளி, கபம், இருமல் தணியும். மணத்தக்காளிக் கீரை மலச்சிக்கலை போக்கும். 


👉மணத்தக்காளி பழம் கர்ப்பிணிக்களுக்கு நல்லது. கருவை வலிமையாக்கும். மணத்தக்காளி செடியை இலை, காய், பழம் இவற்றுடன் சேர்த்து இடித்து பிழிந்தெடுத்து சாறு கல்லீரல் வீக்க, கணைய வீக்கம் ஆகியவற்றுக்கு சிறந்த மருந்தாகும்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி