ரயில் கட்டண விலையில் விமான பயணம்.. ரூ.999ல் விமானத்தில் பறக்கலாம்..
ரயில் கட்டண விலையில் விமான பயணம்.. ரூ.999ல் விமானத்தில் பறக்கலாம்.. ஸ்பைஸ்ஜெட் ஆஃபர்..!
கொரோனா காலகட்டத்தில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட துறைகளில், விமான துறையும் ஒன்று. ஏனெனில் அந்த நிறுவனங்களின் சேவை முழுவதும் முடக்கப்பட்டிருந்தது.
எனினும் செலவினங்கள் மட்டும் தொடர்ந்து இருந்தன. குறிப்பாக ஊழியர்களின் சம்பளம், பராமரிப்பு செலவு என தொடர்ந்து செய்ய வேண்டிய கட்டாயத்திற்குள் நிறுவனங்கள் இருந்து வந்தன. இந்த நிலையில் தற்போது மீண்டும் சேவையினை தொடங்கியுள்ளது
குறைந்த கட்டண சலுகை இந்தியாவின் முன்னணி பட்ஜெட் கட்டண விமான நிறுவனமான ஸ்பைஸ்ஜெட், mega monsoon sale என்ற அதிரடியான திட்டத்தினை அறிவித்துள்ளது. இதன்படி அதன் உள்நாட்டு விமான கட்டண தொகையானது 999 ரூபாயில் இருந்து ஆரம்பிக்கிறது.
சலுகை எப்போது வரை? இதன் மூலம் உள்நாட்டு பயணிகள் சில பகுதிகளுக்கு வெறும் 999 ரூபாயில் இருந்து பயணிக்க தொடங்கலாம். இந்த 999 ரூபாய் என்பது அனைத்து கட்டணங்களையும் உள்ளடக்கியது. மேலும் இந்த விமான கட்டணத்திற்கு ஈடான தொகைக்கு அதாவது 1000 ரூபாய் வரை இலவச விமான வவுச்சரும் கிடைக்கும் என அறிவித்துள்ளது.

எப்போது பயணிக்கலாம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த சலுகை திட்டமானது ஜூன் 25 அன்று தொடங்கிய நிலையில், ஜூன் 30, 2021 வரையில் அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆகஸ்ட் 1, 2021 முதல் மார்ச் 31, 2022 வரை பயணித்துக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு ஆஃபர்களும் உண்டு எனினும் நேரடி உள்நாட்டு விமானங்களுக்கு மட்டுமே இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விமான நிறுவனத்தின் இணையத்தில் பதிவு செய்யும்போது, Grofers, Mfine, Medibuddy, Mobikwik, PARK Hotels உள்ளிட்ட நிறுவனங்களின் சிறப்பு ஆஃபர்கள் கிடைக்கும்
பல சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சில நிபந்தனைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு வழி பயணத்திற்கு மட்டுமே பொருந்தும். நேரடி உள்நாட்டு விமானங்களுக்கு மட்டுமே இந்த சலுகை பொருந்தும். அனைத்து சேனல்கள் மூலம் செய்யப்பட்ட முன்பதிவுகளுக்கு இந்த சலுகை பொருந்தும்.

ஸ்பைஸ்ஜெட்டின் இந்த சலுகையினை வேறு எந்த சலுகையுடனும் இணைக்க முடியாது. குழும முன்பதிவுகளுக்கு இந்த சலுகையானது பொருந்தாது. இந்த விற்பனையின் கீழ் பதிவு செய்யக்கூடிய இந்த டிக்கெட்டுகள் மாற்றக்கூடியவை. ரத்து செய்யக்கூடியவை. முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை. விமான நேரங்கள் மாற்றத்தக்கவை. இது தவிர இன்னும் சில நிபந்தனைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
Comments