ஷோபனா ரவி
உங்கள் அம்மா துார்தர்ஷனில் பணிபுரிந்ததால், உங்களுக்கு செய்தி வாசிப்பாளராகும் எண்ணம் வந்ததா? அப்படியும் சொல்லலாம். என் அம்மா வானொலியில் செய்தி வாசித்ததை, சிறுவயதில் இருந்தே கேட்டிருக்கிறேன். அதனால், அந்த வாய்ப்பு வந்தபோது, எனக்கு எளிதாக இருந்தது. முதன் முதலில் செய்தி வாசித்தபோது ஏற்பட்ட உணர்வு... படிப்பது தானே... எளிதாக தான் இருந்தது. தமிழ் மற்றும் ஆங்கிலச் செய்திகளை வாசிக்க பிரத்யேக பயிற்சி எடுத்தீர்களா? தமிழ் உச்சரிப்பின் முக்கியத்துவத்தை பள்ளி நாடகங்களில் நடித்தபோதும், ஆங்கில உச்சரிப்பை, கல்லுாரி பாடத்தின் போதும், நான் ஏற்கனவே உணர்ந்திருந்தேன். எனக்கு எழுத, படிக்கத் தெரிந்த மொழிகளான ஆங்கிலத்தையும், தமிழையும் சரியாக உச்சரிக்கும் போது, நாவில் அமுதுாறுவதாக உணர்வேன். அத்துடன், தமிழை ஏற்ற, இறக்கத்துடன் வாசிக்க, என் ஆசிரியர்களும், அம்மாவும் எனக்கு பழக்கி இருந்தனர். ஆங்கில இலக்கியம் படித்தபோது, அதற்கு, என்னை நானே பழக்கிக் கொண்டேன். தமிழ், 'ட' வேறு, ஆங்கிலத்தில், 'ட' உச்சரிப்பு வேறு. மொழிக்கு மொழி இப்படி பல வேறுபாடுகள் உண்டு. ஒவ்வொரு மொழிக்கும் தனித்துவம் உள்ளது. மறக்க முடி...