ஆயிரம் பேர் இருந்தாலும் அன்னையைப் போல் வருமா ?



 

ஆயிரம் பேர் இருந்தாலும் அன்னையைப் போல் வருமா ?

ஆசையுடன் தலை கோதும் 

அவள் விரல்கள் இனி வருமா?

*

தன் வயிற்றுப் பசி அறியாள்

என் வயிற்றுப் பசி அறிவாள்

எப்போதும் கவலையுடன் எனைப்பற்றி நினைத்திருப்பாள்.

*

சிறு குடிசை குடியிருப்பில் அரண்மனையைக் கொண்டு வந்தாள்

வறுமை என்றால் என்னவென்று அறியாமல் வளர்த்துவிட்டாள்.

*

பொருள் வளமோ 

மிகச் சிறிது 

அவள் மன வளமோ மிகப் பெரிது


வீட்டில் பொற்கிண்ணம் ஏதுமில்லை

ஆனால் எவர்சில்வர் டம்ளருண்டு

ஏழு மணி ஆனால் அதில் நிச்சயமாய்க் காபி உண்டு.


மூன்று வேளை உணவுக்கே

போராடும் கைக்காசில்

இடை இடையே

வேர்கடலை அவியலுக்கும்

சர்க்கரை வள்ளிக் கிழங்குக்கும் குறையொன்றும் இருந்ததில்லை.


அவள் அணிந்து வந்த நகைகளெல்லாம் இழந்துவிட்ட வேளையிலும்

எங்கள் புன்னகையில்

மனம் நிறைந்தாள்

மக்கள் உயர்வில் அவள்

மகிழ்ந்திருந்தாள்

*

நான் ஆளான பின்பு அவள் 

என்னோடு வாழவில்லை

அதை நினைத்தால்தான்

என் நெஞ்சம் 

இப்போதும் தாங்கவில்லை.

*

ஆயிரம் பேர் இருந்தாலும் அன்னையைப் போல் வருமா ?

ஆசையுடன் தலை கோதும் அவள் விரல்கள் இனி வருமா?

*

#அன்னையர்_தினம்

==பிருந்தாசாரதி






Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி