சுவையான சர்க்கரை வள்ளி போளி ரெடி.

 


இது அனன்யா பக்கம்


அனன்யா மகாதேவன் .பேஸ்புக்ல பிரபலம்.சரளமான நகைச்சுவை

படிப்பவர்கள் ஆனந்தத்தில் திளைப்பது நிச்சயம்

எதார்த்தமான உரை நடை


பாருங்க இன்று அவர்களின் சமையல் குறிப்பை


நான் இருக்கேனே, ஒரு வில்லெஜ் விஞ்ஞானி, ஐடியா மணி, ஐடியா டெப்போ இப்படி எனக்குள்ள பல ரூபங்கள் பத்தி யாருக்கும் தெரியாது . ஏன்னா பீத்திக்கற பழக்கம் எனக்கில்லை. பல சமயம் என்னுடைய சாகசங்களையும் வீர தீர பராக்ரமங்களையும் தன்னடக்கத்தோட கடந்து வந்துடுவேன்.

ஆனா பாருங்க, திஸ் டைம், என்னாலேயே நம்பமுடியாத அளவுக்கு ஒரு கிரியேட்டிவ் சாதனை படைச்சிருக்கேன். இதையெல்லாம் கல்வெட்டுல பொறிச்சு வைச்சா பிற்கால சந்ததிகள் பார்த்து தெரிஞ்சுப்பாங்க. எங்கே? ஐடியா இல்லாத பசங்க.
பல்லாயிரக்கணக்காண வருஷங்களுக்கு அப்புறமா ஃபேஸ்புக்ன்னு ஒரு ஆப்ல நம்ம முன்னோர்கள் சமயல் குறிப்பு கண்டு பிடிச்சேன்னு யாராவது இந்த டாக்யுமெண்டேஷனை பார்த்து புல்லரிப்பாங்க அப்படீங்கற ஒரே காரணத்துக்காக இதை எழுதறேன்னா அது மிகையில்லை.



அந்த சர்க்கரை வள்ளி கிழங்கை வாங்கி ஒரு வாரமாச்சு. சாப்பிட இஷ்டமில்லை. "அப்போ ஏன் வாங்கித்தொலையுறே"ன்னு மைண்ட் வாய்ஸ் ராத்திரியெல்லாம் அர்ச்சனை தாங்க முடியலை! மேற் சொன்னபடி, ஹம் ஏக் ஐடியா மணி, டெப்போ அவுர் வில்லெஜ் விஞ்ஞானி ஹைன்னா, அதனால இப்படி செஞ்சேன். உடனுக்குடன் சர்க்கரை வள்ளி கிழங்கு பறந்துஃபைடு ஹை! டேஸ்டுன்னா அப்பிடி ஒரு டேஸ்டு.
ஸ்டெப் 1. கிழங்கை குக்கர்ல 4 ஏலக்காய் தட்டிப் போட்டு நன்னா வேகவைச்சுக்கணும்.
2. துளியூண்டு உப்பு மட்டும் போட்டு கோதுமை மாவை மேல்மாவுக்கு போளி பதத்துல தளரா பிசைஞ்சுக்கணும்.
3. வேகவைச்ச கிழங்கை ஒரு மேஷர் உதவியுடன் மேஷ் பண்ணிக்கணும்.
4. ரெண்டு டேபிள்ஸ்பூன் தேங்காய்த்துருவல், ரெண்டு டேபிள்ஸ்பூன் வெல்லத்துடன் சேர்த்து மீண்டும் மேஷ் பண்ணிக்கொள்ளவும்.
5. சின்னச்சின்ன பந்துகளாக கிழங்கு மிக்ஸை உருட்டிண்டு கோதுமை மாவிற்குள் stuff பண்ணிக்கொண்டு லேசாக ரோல் பண்ணி இட்டு கல்லில் போட்டு நெய் தாராளமா விட்டு பொரிச்சு எடுத்தா சுவையான சர்க்கரை வள்ளி போளி ரெடி.
எல்லாம் ஆலு பராட்டா இன்ஸ்பிரேஷன் தான். அது காரம், இது இனிப்பு. பதார்த்தம் வீணாகாமல் போனால் எவ்ரிதிங் இஸ் ஃபேர். இல்லியா?
"இதையே இப்போத்தான் கண்டுபிடிக்கறையா" போன்ற ரூடான கமெண்டுகள் கண்டிப்பாக நீக்கப்படும்." யூ ஆர் சிம்ப்ளீ க்ரேட் அனன்யா" போன்ற கமெண்டுகள் அதிக அளவில் வரவேற்கப்படுகின்றன! ஹீஹ்ஹீ
நன்றிலு, நமஸ்காரமுலு.
பின்குறிப்பு : மேற்கண்ட ரெஸிப்பியை எடுத்துண்டு வேகமாக ஓடவேண்டாம். மரியாதையா தயார் பண்ணி ஃபோட்டோ எடுத்து கமெண்ட்ஸில் போடவும்.
பின்குறிப்பு 2: நான் மேலே சொன்ன இன்ஸ்ட்ரகக்ஷன்ல ஒரு துளியும் ஸ்லிப்பாச்சோ, மண்டை சிதறி போளி நாசம். அதனால ஜாக்கிரதை. பீக்கேர்ஃபுல்.


by


Ananya Mahadevan



Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி