கொத்தமல்லி, இஞ்சி, ஏலக்காய்… காலைகாபி

உடலுக்கு ஆரோக்கியம் தரும் கொத்தமல்லி காபி செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் காணலாம்





 கொரோனா அச்சுறுத்தும் இந்த காலத்தில் நாம் இயற்கை உணவுகளையே அதிகம் உட்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

இந்த காலம்  நாம் இயற்கை உணவுகளின் அவசியத்தையும் அதில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகளையும் அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளது என்றே கூறலாம். அந்த வகையில் தற்போது நாம் இந்த பதிவில் கூறப்போகும் இயற்கை பொருட்கள் அடங்கிய காபி, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். அஜீரணத்தை சீராக்கவும், ஆரோக்கிய நன்மைகளையும் தரக்கூடியது. மேலும் பக்கவிளைவுகளும் ஏற்படாது.


நம் முன்னோர்களின் அருமருந்தாக இருந்த கொத்தமல்லி காபிதான் இப்போது நாம் சொல்ல வந்த இயற்கை திரவம். இதை எப்படி செய்வது?

தேவையான பொருட்கள்.

வரமல்லி – 2 ஸ்பூன்,

இஞ்சி – 2 சிறிய துண்டுகள்,

ஏலக்காய் – 2,

நாட்டு சர்க்கரை – 2 ஸ்பூன்.

செய்முறை :

முதலில் இஞ்சி,மல்லி, 2 ஏலக்காய் தனித்தனியாக எடுத்து இடித்து வைத்துக்கொள்ளவும். அடுத்து பாலை கொஞ்சம் சூடு படுத்தி எடுத்துக்கொள்ளவும். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் 2 கப் அளவு தண்ணீரை ஊற்றி, நசுக்கி வைத்திருக்கும் இஞ்சி, மல்லி, ஏலக்காய் சேர்த்து நன்றாக கொதிக்க விடவேண்டும். நன்றாக கொதித்தவுடன்,  கடைசியாக 2 ஸ்பூன் நாட்டுச் சர்க்கரையையும் இந்த தண்ணீரோடு சேர்த்து நன்றாக கரைத்து விடவும்.

அடுத்து இந்த தண்ணீர் நன்றாக 5 நிமிடம் கொதித்தவுடன் வடிகட்டி தண்ணீரை மட்டும் தனியாக எடுத்துக் கொள்ளுங்கள். பால் சேர்க்காமல் இந்தத் தண்ணீரை அப்படியே பருகினாலும் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது தான். இதில் இன்னும் கொஞ்சம் கூடுதலான சுவையை சேர்க்க காய்ச்சிய பாலை ஊற்றி கலந்து பரிமாறினால் சூப்பரான மல்லி காபி தயாராகிவிடும்.

உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் இந்த காபி  ஜீரண சக்தியை அதிகப்படுத்த, சளி வறட்டு இருமல் போன்ற பிரச்சனைகளிலிருந்து விடுபட, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த உதவும்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி