தாய் கண்முன் நடித்த ‘நடிகர் திலகம்’ சிவாஜி
தாய் கண்முன் நடித்த ‘நடிகர் திலகம்’ சிவாஜி
‘‘திருவருட் செல்வர் படத்தில், அப்பா சிவாஜிக்கு மிக வயதான முதியவர் போன்ற வேடம். படப்பிடிப்பு முடிந்தது. ஆனால், அப்பா மேக்கப்பை கலைக்கவில்லை. அப்படியே வீட்டுக்கு புறப்பட்டார். வீட்டை அடைந்ததும் வாசலில் நின்றபடி குரலை மாற்றி, ‘‘அம்மா தாயே’’ என்று குரல் கொடுக்கிறார்.
வெளியே வருகிறார், பாட்டி ராஜாமணி அம்மாள்.
அவரிடம், ‘‘நான் ஒரு சிவபக்தன். கைலாய மலைக்கு போய்க்கொண்டிருக்கிறேன். வழியில் கிடைப்பதை சாப்பிடுவேன். ஒரு வாய் சோறு கிடைக்குமா?’’ என்று கேட்கிறார். பக்தி பரவசத்தில் ராஜாமணி அம்மாள், வந்திருப்பவர் தன் மகன் என்று அறியாமல், வீட்டுக்குள் அழைத்து சென்று உணவு கொடுத்து வணங்குகிறார்.
சாமியார் சாப்பிடும் விதத்தை பார்த்து, `நம்ம கணேசன் சாப்பிடு வதைப்போல் இருக்கிறதே' என்று ராஜா மணி அம்மாள் கூர்ந்து கவனிக்கிறார்.
எத்தனையோ முக பாவங்களை காட்டுபவர், அம்மாவின் முகமாறுதலை பார்த்து சத்தம் போட்டு சிரிக்கிறார்.
அந்த சிரிப்பை பார்த்து சாப்பிடுபவர் தன் மகன்தான் என்பதை உணர்ந்து பிரமிக்கிறார், ராஜாமணி அம்மாள்.
நடிப்பு திறமையால் பெற்ற தாயின் கண் களையே ஏமாற்றியவர், நடிகர் திலகம்’’ என்றார், பிரபு.
Comments