தம்பதியர்கள் தினம்
தம்பதியர்கள் தின வாழ்த்துகள்.
தன் பதியுடன் சிறப்புற வாழ்பவர்களே தம்பதியர்!
ஓரறையில் ஒன்றாக இருப்பதல்ல தாம்பத்தியம்!
ஒருவரை ஒருவர் மனம் விட்டுப் புரிந்திருத்தலே தாம்பத்தியம்!
ஒரு கை என்றும் ஓசை எழுப்புவதில்லை!
இருகரங்கள் இணைந்தாலே ஓசை எழும்பும்!
இது சப்தங்களுக்கு சரிதானென்றாலும்
வாக்குவாதங்களின் பொழுது ஒருவர் பேசுகையில்
மற்றொருவர் அமைதி காப்பதே அமைதிக்கான மாற்று வழி!
பிறருக்கு முன்னால் நடிப்பதை விடுத்து என்றும் உள்ளன்போடிருப்பதே உறவுகளின் சங்கமம்.
தர்மங்கள் செய்வதில் இருவரும் இணைந்தே மனமுவந்து செய்வது தான் புண்ணியமென புராணங்கள் கூறுகின்றன!
எவரிடத்திலும் விட்டுக் கொடுக்காமல் தவறுகளைத் தனிமையிலும்
பாராட்டுகளைப் பொதுவிலும் கூறி இல்லாளின் முகத்தினை புன்சிரிப்பினைக் கண்டு கணவரும்,
கணவரின் குறைகளைத் தனிமையிலும்,
நிறைகளைச் சபையிலும் கூறி அவரைக் கௌரவப்படுத்தும் மனைவியும் அமைகையில் சொர்க்கம் வேறெங்கும் தம்பதியர் தேடவேண்டியதில்லை.
வாழ்வில் இறுதிவரை இணைபிரியாத மகன்றிலாக வலம் வருவோம்!
நிர்மலா ராஜவேல்
சென்னை
Comments