'நரகத்தில் சில தேவதைகள்
'நரகத்தில் சில தேவதைகள்
'
*
உலக செவிலியர் தினத்தில் - மே12 - செவிலியர்கள் அனைவருக்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
கொரோனாவின் கொடிய தாக்குதலால் உலகம் அல்லல்படும் இந்த இக்கட்டான சூழலில் உங்கள் பணி மிகவும் போற்றத்தக்கது.
'நரகத்தில் சில தேவதைகள்' என கவியரசு நா. காமராசன் செவிலியர்கள் குறித்துக் கூறிய வாசகம் முற்றிலும் உண்மை. கொரோனா தாக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நாட்களில் இதை நான் அனுபவப்பூர்வமாகவே உணர்ந்திருக்கிறேன். பகலிரவு பாராமல் ஓய்வின்றிப் பணியாற்றும் உங்கள் உழைப்புக்கும் தியாகத்திற்கும் நாங்கள் கொடுக்கும் சம்பளம் எந்த வகையிலும் ஈடாகாது.
கொரோனா தொற்றுக்கு எதிராகப் பணிபுரியும்போது உங்களில் சிலர் உயிர்த் தியாகமே செய்திருக்கிறீர்கள்.
போரில் காயம்பட்ட வீரர்களுக்குக் கைவிளக்கேந்தி மருத்துவம் பார்த்த ப்ளாரன்ஸ் நைட்டிங்கேலின் மறு உருவங்களாகவே உங்களை நினைக்கத் தோன்றுகிறது.
கைவிளக்கேந்திய காரிகைகளே....
உங்கள் கைவிளக்கில் மினுமினுக்கும் சிறு சுடரின் ஒளியில்தான் இன்று அன்பு உயிர்வாழ்கிறது. எங்கள் நெஞ்சின் சுடரை உங்களுக்குத்
தருகிறோம். எங்கள் அன்பும் நன்றியும் கலந்த கண்ணீர்த்துளிகளையும் உங்கள் உள்ளங்கைகளில் புதைக்கிறோம்.
நீல உடை தரித்துப் பணியாற்றும்
வெள்ளுடை தேவதைகளே!
நீங்கள் நலமாக வாழ்க...
இந்த நிலம் நலமாக வாழ.
- பிருந்தா சாரதி
மே 12, 2021
Comments