69 வயதிலும் இளமையாக காட்சியளிக்கும் மம்முட்டி.
69 வயதிலும் இளமையாக காட்சியளிக்கும் மம்முட்டி.
தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகர்களுள் ஒருவராக இருப்பவர் மம்மூட்டி(mammootty). மலையாள சினிமாவை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும் தமிழ் மற்றும் தெலுங்கில் இவருக்கு ரசிகர்கள் ஏராளம்
தமிழிலும் அவ்வப்போது நல்ல திரைப்படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில்கூட இயக்குனர் ராம் இயக்கத்தில் பேரன்பு எனும் படத்தில் மம்முட்டி நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சமீபகாலமாக மம்முட்டியின் படங்கள் பெரும்பாலும் மலையாள சினிமாவில் நடிக்கவில்லை என்ற ஒரு கருத்து நிலவி வந்தது. அவருக்கு வயதாகி விட்டதால் சினிமாவிலிருந்து ஓய்வு பெறலாம் எனவும் கருத்துக்கள் எழத் தொடங்கின.
ஆனால் அதற்கு மாறாக சக வயதுடைய மம்முட்டியின் நண்பர் மோகன்லால் பாக்ஸ் ஆபீஸில் இன்னும் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறார்.
எப்படியாவது ஒரு பெரிய வெற்றிப் படத்தைக் கொடுத்து விட வேண்டும் என காட்டுத்தனமாக உழைத்து வருகிறார் மம்முட்டி. அந்த வகையில் அடுத்ததாக நடிக்கவிருக்கும் படத்திற்காக கரடுமுரடாக உடலை ஏற்றி உள்ளார்.
சமீபத்தில்கூட அண்ணாத்த படப்பிடிப்பில் மீனாவிடம் ரஜினி, நீ இன்னும் இளமையாக இருக்கிறாய், நான் பார் வயதாகி எப்படி ஆகிவிட்டேன் என சொல்லி கிண்டலடித்ததாக செய்திகள் வந்தது. இந்நிலையில் கண்டிப்பாக ரஜினி இதைப் பார்த்தால் மம்முட்டிக்கு போன் பண்ணி ரகசியம் கேட்டாலும் கேட்பார் என்கிறார்கள் சினிமா வாசிகள்.
Comments