ராஜஸ்தானை துவம்சம் செய்து சிஎஸ்கே மாஸ் வெற்றி!

 பக்கா பிளானிங்.. மேட்சை மாற்றிய ஜட்டு & அலிபாய் ..


ராஜஸ்தானை துவம்சம் செய்து சிஎஸ்கே மாஸ் வெற்றி!

மும்பை; ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணி திட்டமிட்டு அதிரடியாக ஆடி வெற்றிபெற்றுள்ளது.


பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் ராஜஸ்தானுக்கும் சென்னைக்கும் இடையிலான ஐபிஎல் போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது. சிஎஸ்கேவிற்கு எதிரான இந்த போட்டியில் ராஜஸ்தான் டாஸ் வென்றது. டாஸ் வென்ற ராஜஸ்தான் பவுலிங் தேர்வு செய்தது.


இதில் ராஜஸ்தானுக்கு எதிராக முதலில் பேட்டிங் இறங்கிய சிஎஸ்கே 20 ஓவரில் 9 விக்கெட்டிற்கு 188 ரன்கள் எடுத்தது. இதையடுத்து இறங்கிய ராஜஸ்தான் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. சிஎஸ்கே அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.


சிஎஸ்கே

சிஎஸ்கே அணியில் முதல் போட்டியில் பவுலிங் அவ்வளவு சிறப்பாக இல்லை. முக்கியமாக சாஹர் அவ்வளவு சிறப்பாக பவுலிங் செய்யவில்லை. ஆனால் பஞ்சாப்பிற்கு எதிராக நடந்த இரண்டாவது போட்டியில் சிஎஸ்கே அணியில் சாஹர் சிறப்பாக பவுலிங் செய்து 4 விக்கெட்டுகளை எடுத்தார். சிஎஸ்கே அணியின் பேட்டிங் பவுலிங் இரண்டும் சம பலத்துடன் உள்ளது.


ஆடும் அணி

இதனால் கடந்த போட்டியில் ஆடிய அதே சிஎஸ்கே அணி இன்றும் ஆடுகிறது. டு பிளசிஸ், ரூத்துராஜ், மொயின் அலி, ரெய்னா, ஜடேஜா, அம்பதி ராயுடு, சாம் கரன், தோனி, பிராவோ, சாஹர், ஷரத்துல் தாக்கூர் ஆகியோர் இன்று ராஜஸ்தானுக்கு எதிராக ஆடுகிறார்கள்.


ராஜஸ்தான்

இன்று ஆடும் ராஜஸ்தான் அணியில் மனன் வோஹ்ரா, ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன், சிவம் துபே, டேவிட் மில்லர், ரியான் பராக், ராகுல் திவாதியா, கிறிஸ் மோரிஸ், ஜெயதேவ் உனட்கட், சேட்டன் சக்கரியா, முஸ்தபிசர் ரஹ்மான் ஆகியோர் ஆடுகிறார்கள்.


டாஸ்

வான்கடே மைதானத்தில் இன்று சிஎஸ்கேவிற்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் டாஸ் வென்றுள்ளது. டாஸ் வென்ற ராஜஸ்தான் பவுலிங் தேர்வு செய்துள்ளது. மும்பையில் எளிதாக சேஸ் செய்ய முடியும் என்பதால் ராஜஸ்தான் அணி டாஸ் வென்று சேசிங் செய்ய முடிவு செய்துள்ளது.


பேட்டிங்

இன்று சிஎஸ்கே அணிக்காக பேட்டிங் இறங்கிய ரூத்துராஜ் மீண்டும் சொதப்பி 10 ரன்களுக்கு அவுட் ஆனார். ஆனால் அதன்பின் வரிசையாக டாப் ஆர்டர் வீரர்கள் அதிரடி காட்டினார்கள். டு பிளசிஸ் 33, மொயின் அலி 26, ராயுடு 27, ரெய்னா 18 ரன்கள் எடுத்தனர். ஆனால் அதன்பின் தோனி, ஜடேஜா இடையில் திணறினார்கள்.


 மிடில்


இதனால் மிடில் ஓவர்களில் சிஎஸ்கே ரன் எடுக்க முடியாமல் திணறியது. மிடில் ஓவர்களில் ரன் ரேட் மொத்தமாக குறைந்தது. ஆனால் கடைசியில் வந்த பிராவோ 8 பாலில் 1 சிக்ஸ், 1 பவுண்டரி என்று 20 ரன்கள் எடுத்தார். இதனால் ராஜஸ்தானுக்கு எதிராக சிஎஸ்கே 20 ஓவரில் 9 விக்கெட்டிற்கு 188 ரன்கள் எடுத்துள்ளது. ராஜஸ்தானுக்கு சிஎஸ்கே 189 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.


ராஜஸ்தான்

இதையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் தொடக்கத்தில் அதிரடியாக பேட்டிங் செய்தது. அதிலும் பவர் பிளேவில் சிஎஸ்கேவை விட ராஜஸ்தான் நன்றாக பேட்டிங் செய்தது. வோஹ்ரா, சஞ்சு சாம்சன் அவுட் ஆனாலும் பட்லர் தொடர்ந்து அதிரடியாக ஆடினார். அதிலும் 10 ஓவருக்கு 81 ரன்கள் எடுத்து 2 விக்கெட் மட்டுமே எடுத்து ராஜஸ்தான் வலுவாக இருந்தது.


 ஜடேஜா 


ஆனால் அதன்பின் 12வது ஓவரில் ஜடேஜா அடுத்தடுத்து பட்லர், துபே விக்கெட்டுகளை எடுத்தார். பின் அடுத்த ஓவரிலேயே டேவிட் மில்லர் விக்கெட்டை மொயின் அலி எடுத்தார். பின் 15வது ஓவரில் அடுத்தடுத்து மோரிஸ், ரியான் பராக் விக்கெட்டுகளை மொயின் அலி எடுத்தார். இதனால் மொத்தமாக ராஜஸ்தானிடம் இருந்து சிஎஸ்கே பக்கம் போட்டி திரும்பியது. இதையடுத்து இறங்கிய ராஜஸ்தான் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. சிஎஸ்கே அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி