எஸ்.ஜானகி ஒரு பாட்டுப் பல்கலைக் கழகம்


எஸ்.ஜானகி ஒரு பாட்டுப் பல்கலைக் கழகம். “எஸ்.ஜானகி
அளவுக்கு பாடல் தாங்கியிருக்கும் உணர்வை வெளிப்படுத்த இந்தியாவிலேயே யாரும்
இல்லை” என்று எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் குறிப்பிடுவது வெறும் புகழ்ச்சி மாலை அல்ல என்பதை கடைக் கோடி ரசிகனும் உணர்ந்து நிற்பான்.
பாடகி சித்ராவின் ஆரம்ப காலத்தில் ஜானகி அம்மாவின் பாட்டைக் கேளு அவங்க ஒரு பாடலை எவ்வளவு தூரம் நியாயம் செய்து பாடியிருக்காங்க என்று இளையராஜா கை காட்டிய போது அங்கே நடமாடும் பாட்டுப் பல்கலைக் கழகமாகத் திகழ்ந்து
காட்டுகிறார்.
திரையிசைப் பாடல் என்பது வெறுமனே சங்கீத சாகித்தியத்தின் திரட்டு அல்ல அது பாத்திரத்தின் பண்பை, காட்சிச் சூழலின்
அனுபவத்தைக் இசைக் கூட்டில் குரல் வழியே கடத்துவது. அங்கே ஒட்டுமொத்த பாடலுமல்ல ஒவ்வொரு வரிகளுக்குமே உணர்வு பேதம் கற்பித்துக் கொண்டு வர
வேண்டும் என்ற நுட்பத்தைப் போதித்தவர்கள் திரையிசையில் ஒரு சிலரே. அங்கு எஸ்.ஜானகி அம்மாவின் பங்கு அளப்பரியது.
ஒரு சாதாரண அல்லது அமைதியாகப் போகும் பாட்டின் உணர்ச்சியை நம்முள் அசுரத்தனமாக ஊடுருவி இறக்கி விடுகிறது எஸ்.ஜானகியின் குரல்.
“ராசாவே ஒன்ன நம்பி இந்த ரோசாப்பூ இருக்குதுங்க” ஒலிக்கையில் தனிமையின்
குரலாகவும் “சின்னச் சின்ன வண்ணக் குயில்” பாடும் போது குதூகத்தின் வெளிப்பாடாகவும் மனது மொழி பெயர்க்கும் போது எஸ்.ஜானகி ஒரு பெண்ணின்
உணர்வாக மட்டும் அடையாளம் இல்லாது ஆணின் மனோபாவங்களின் மொழியாகவும்
அடையாளப்படுத்தப்படுகிறார்.
அதனால் தான் அந்தந்த மன நிலைகளுக்குத் தோதாகச் சவாரி செய்யப் பாட்டு வாகனம் தேடும் போது அது எஸ்.ஜானகி ஓட்டும்
குதிரையிலும் சுகமாகச் சவாரி செய்கிறது.
ஒரு பாடலுக்குக் கொடுக்கும் உச்ச பட்ச நேர்த்தியையும், உருவாக்கத்தையும் வைத்து
எப்படி இசைஞானி இளையராஜாவை ஒரு இசையமைப்பாளர் என்ற எல்லை கடந்து இயக்குநர் என்ற நிலையில் வைத்துப் பார்க்க முடிகிறதோ அது போல எஸ்.ஜானகி ஒவ்வொரு
பாடலையும் கையாளும் விதத்தில் இசையமைப்பாளராகவே மிளிர்கிறார்.
மெல்லிசை மன்னர் காலத்தில் T.M.செளந்தரராஜன், P.சுசீலா என்று எப்படி அமைந்ததோ அது போல்
இசைஞானி இளையராஜா காலத்தில் எஸ்.ஜானகி, எஸ்.பி.பாலசுப்ரமணியம் என்று
பரிணமித்தது. இவர் காலத்தில் நாமெல்லாம் இருப்பது பெருமை.




 கவிஞர் கண்ணதாசன் எழுதிய, ’பூஜைக்கு வந்த மலரே வா..’ பாடலை எம்.எஸ்.விஸ்வநாதன் டி.கே.ராமமூர்த்தி இசையில் ’பாத காணிக்கை’ படத்திற்காக 1962ம் ஆண்டு பாடினார். அதே ஆண்டு ’சுமைதாங்கி’ பி.பி.ஸ்ரீனிவாஸுடன் ’எந்தன் பார்வையின் கேள்விக்கு பதில் என்ன..’, ’ஆலயமணி’ படத்தில், ‘தூக்கம் உன் கண்களை.


’போலீஸ்காரன் மகள்’ படத்தில், ’இந்த மன்றத்தில் ஓடிவரும்..’ ஆகிய பாடல்களை பாடினார். இவையெல்லாவற்றுக்கும் எம்.எஸ்.வி, டி.கே.ராமமூர்த்தி இரட்டையர்கள்தான் இசை அமைப்பாளர்கள். பாடலை கண்ணதாசன் எழுதியிருந்தார்.
1963ம் ஆண்டு ’நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தில் பி.பி.ஸ்ரீனிவாஸ் உடன் இணைந்து ’அழகுக்கும் மலருக்கும்..’ பாடலை பாடினார். இந்த பாடலுக்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்தார்.
1965ம் ஆண்டு ’திருவிளையாடல்’ படத்தில் ’பொதிகை மலை உச்சியிலே..’ பாடலை பி.பி.ஸ்ரீனிவாஸுடன் இணைந்தும், 1969ம் ஆண்டு ’அடிமைப்பெண்’ படத்தில், ’காலத்தை வென்றவன்’ பாடலுக்கு பி.சுசீலா வுடனும் இணைந்தும் எஸ்.ஜானகி பாடினார். இப்பாடலுக்கு கே.வி.மகாதேவன் இசை அமைத்தார்.
1970ல் ’என் அண்ணன்’ படத்தில், ’நீல நிறம் வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்’ பாடலை டி.எம்.சவுந்திரராஜனுடன் இணைந்து பாடினார். ’எங்கிருந்தோ வந்தாள்’ படத்தில் எம் எஸ் வி இசையில், ’வந்தவர்கள் வாழ்க மற்றவர்கள் வருக’ பாடலை தனித்துப் பாடினார். இப்பாடல்களில் இசை அமைப்பாளர், பாடகர்கள் மாறினாலும் பாடல்களை எழுதியவர் கண்ணதாசன்தான்.
1973ம் ஆண்டு, ’பொண்ணுக்கு தங்க மனசு’ படத்தில், ‘தஞ்சாவூர் சீமையிலே..’ பாடலை முத்துலிங்கம் எழுத பி.எஸ்.சசிரேகா, சீர்காழி கோவிந்தராஜன் ஆகியோருடன் இணைந்து பாடினர். ஜி.கே.வெங்கடேஷ் இசை அமைத் தார்.
1974ம் ஆண்டு, ’அவள் ஒரு தொடர்கதை’ படத்தில் எம்.எஸ்.வி இசையில் கண்ணதாசன் எழுதிய, ’கண்ணிலே என்னவுண்டு’ பாடலைப் பாடினார் ஜானகி.


976ம் ஆண்டு ’அன்னக்கிளி’ படத்தில் இளையாராஜா இசை அமைத்த முதல் படத்தில் ’மச்சான பாத்தீங்களா..’ என்ற பாடிய பாடல் பட்டி தொட்டி எங்கும் துவம்சம் செய்து வெளுத்து வாங்கியது. பாடலை பஞ்சு அருணாச்சலம் எழுதினார்.
1976ம் ஆண்டு ’உறவாடும் நெஞ்சம்’ படத்தில், ’ஒரு நாள் உன்னோடு..’ பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியத்துடன் இணைந்து பாடினார். இளையாராஜா இசை அமைத்தார். அடுத்து, ’அவர்கள்’ படத்தில் மீண்டும் எம்.எஸ்.வி இசைக்கு, ’காற்றுக்கென்ன வேலி’ பாடலுக்கு குரல் கொடுத்தார். கண்ணதாசன் பாடல் எழுதினார்.
1977ம் ஆண்டு, ’கவிக்குயில்’ படத்தில் இளையராஜா இசையில், ’குயிலே கவிக் குயிலே ..’ பாடல் பாடினார். 1978ல் ’அச்சாணி’ படத்தில் கவிஞர் வாலி எழுதிய ’மாதா உன் கோயிலில்..’ பாடிய ஜானகி மீண்டும் வாலி எழுத்தில் அதே ஆண்டில் ’சிகப்பு ரோஜாக்கள்’ ’நினைவோ ஒரு பறவை..’ பாடலை கமலுடன் இணைந்தும் பாடினார். இப்பாடலுக்கு இசை அமைத்ததும் இளையராஜாதான். மீண்டும் 1978ல் இளையராஜா இசையில் ’பிரியா’ படத்தில் பஞ்சு அருணாச்சலம் எழுதிய, ’ஏ பாடல் ஒன்று ராகம்..’ பாடலை கே.ஜே.யேசு தாஸுடன் இணைந்து பாடினார்.
1979ம் ஆண்டு ’தர்மயுத்தம்’ படத்தில் ’ஆகாய கங்கை பாடலை..’ மலேசியா வாசுதேவன் உடன் பாட எம்.ஜி.வல்லபன் பாடலை எழுதியிருந்தார்.
நன்றி: பத்திரிக்கை.காம்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி