தண்ணீர்விட்டான் கிழங்கை எவ்வாறு பயன்படுத்தினால் பயன்கள் கிடைக்கும்...?

 தண்ணீர்விட்டான் கிழங்கை எவ்வாறு பயன்படுத்தினால் பயன்கள் கிடைக்கும்...?



✦தண்ணீர்விட்டான் கிழங்கு, சுக்கு, மிளகு, திப்பிலி தலா 50 கிராம் எடுத்து பொடி செய்து, தினமும் இரண்டு வேளை இரண்டு கிராம் பொடியை தேனில் குழைத்துச் சாப்பிட்டால் அனைத்துவிதமான காய்ச்சல்களும் குணமாகும்.


✦தண்ணீவிட்டான் கிழங்கு, பூனைக்காலி விதை, நெருஞ்சில், அமுக்கரா, சாலாமிசரி – தலா 100கிராம் எடுத்துப் பொடி செய்து தினமும் பாலில் கலந்து குடித்தால் ஆண்மைக்குறைவு, நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

 

✦தண்ணீர்விட்டான் கிழங்கு இனிப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. உடலைப் பலமாக்கும்; உள்ளுறுப்புகளின் புண்களை ஆற்றும்; தாய்ப்பால் சுரப்பை  அதிகரிக்கும்; இசிவை அகற்றும்; ஆண்மையை அதிகரிக்கச் செய்யும்.


✦ஆண்மை பெருக தண்ணீர் விட்டான் கிழங்கைக் காயவைத்து, தூள் செய்துகொண்டு, வேளைக்கு ஒரு தேக்கரண்டி வீதம், தினமும் இரண்டு வேளைகள், ஒரு மாதம் வரை தொடர்ந்து சாப்பிட்டு, ஒரு டம்ளர் பால் குடித்து வர வேண்டும்.

 

✦மாதவிடாயின் போது ஏற்படும் அதிக இரத்தப்போக்கைக் கட்டுப்படுத்த நான்கு தேக்கரண்டி அளவு தண்ணீர் விட்டான் கிழங்கு சாற்றுடன், 2 தேக்கரண்டி அளவு  சர்க்கரை கலந்து பருக வேண்டும். தினமும் மூன்று வேளைகள், 5 நாட்களுக்குச் செய்ய வேண்டும்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி