நீலமணி கவிதைகள்
‘
நீலமணி கவிதைகள்
சூலம் மறந்து வந்த சிவன்
சூரனிடம் பேசினார் சமரசம்.
இராட்டைக்கு மின் இணைப்பாம்
உலக மயமாக்கல்
தாண்டுவதற்கே
கிழித்தது கோடு
அரசியல்வாதி கேட்கிறார்
பொய் அகராதி ஒரு பிரதி
காதால் ஆமாம் போடுகிறது
யானை
மரத்தடிப் பள்ளி
கரும்பலகையில் எழுதியது
காக்கை எச்சம்
பல்லக்கில் ஊர்வார்
அறியார் வியர்வை
- நீலமணி
உழைத்தால் உயரலாம் உழைத்தால் உயரலாம்..
அது சரி, யார் உழைத்தால் யார் உயரலாம்?”
- கவிஞர் நீலமணி
நடந்தான் பாரி / நடந்தான் பாரி / நடந்த மக்களின் / தோள் மீதேறிய / சிவிகைச் செல்வர் / செலுத்திய வரியால் / உருவான தேரைக் / கொடிக்கு நிறுத்தி / முதல் தடவையாக / நடந்தான் பாரி’
சுஜாதா பாராட்டிய நீலமணி கவிதை
- யுகபாரதி
‘காளியம்மா காளியம்மா / ஏன் நாக்கை நீட்டுகிறாய் / நான் என்ன டாக்டரா’
- கவிஞர் நீலமணி
Comments