ரிசர்வ் பேங்க் தொடங்கப்பட்ட நாள்

 இன்னிக்கு *முட்டாள் தினம்* மட்டுமில்லே- நம்ம *ரிசர்வ் பேங்க் தொடங்கப்பட்ட நாளும்* இன்னிக்குத்தான்




🥵
நாம் அநாயசமா யூஸ் பண்ற ரூபாய் நோட்டுகளை வெளியிடும் ஆர்பிஐ ஆரம்பிக்கப்பட்ட நாள் இதே ஏப்ரல் 1,(1935ம் வருஷம்) ம்.
1926ல் ராயல் கமிஷன் ஆன் இந்தியன் கரன்சி அண்ட் ஃபைனான்ஸ் என்ற பிரிட்டிஷ் குழுவின் பரிந்துரையில்தான் ரிசர்வ் வங்கி அமைக்கப்பட்டது.
இன்னும் கொஞ்சம் சிம்பிளா சொல்லணுமுன்னா நம்ம டாக்டர் அம்பேத்கர் வரையறுத்த வரைமுறைகள், சட்ட திட்டங்கள் மற்றும் நிர்வாக அமைப்பு படி இந்திய ரிசர்வ் வங்கி அமைக்கப்பட்டிருக்கிறது.
ஆரமபத்துலே கொல்கத்தாவை தலைமை இடமாக கொண்டு செயல்படத் தொடங்கி தற்போது மும்பையை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வருது
.
ஆனாலும் சுதந்திரத்திற்குப் பின் 01 ஜனவரி 1949 அன்றுதான் இந்திய ரிசர்வ் வங்கி தேசியமயமாக்கப்பட்டது. இப்படி நேஷனலைஸ்ட் ஆவதற்கு முன் ஜூன் 1948 வரை பாகிஸ்தானிற்கு இதே இந்திய ரிசர்வ் வங்கி மத்திய வங்கியாக செயல்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போ ரிசர்வ் வங்கி இந்தியாவின் தலைமை வங்கியாகவும், வங்கிகளின் தலைமை நிர்வாகியாகவும் கருதப்படுகிறது.
இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகள், தனியார் துறை வங்கிகள், வெளிநாட்டு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் கிராம புற வங்கிகளை கட்டுப்படுத்துபவராகவும், கண்கானிப்பாளராகவும் இருக்கிறது ரிசர்வ் வங்கி.
நம்ம நாட்டோட பணப் புழக்கத்தை கட்டுப்படுத்துவது, ஜிடிபி மற்றும் பணவீக்கத்தை கண்கானிப்பது, மக்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மீதான நம்பிக்கையை அதிகரிக்கச் செய்வது, வாடிக்கையாளர் களுக்கு பேங்கிங் ஓம்புட்ஸ்மென் போன்ற சேவைகளை வழங்குவது, பணவீக்கத்தை கட்டுப்படுத்துவது, வங்கிக் கடன்களை கட்டுப்படுத்துவது, வங்கிகளின் வட்டி விகிதங்களை நிர்ணயிப்பது, இந்திய ரூபாய் நோட்டுகளை வெளியிடுவது, இந்திய ரூபாய் நோட்டுகளின் வடிவமைப்பை தீர்மானித்து, மத்திய அரசிடம் கொடுத்து ஒப்புதல் வாங்கிய பின் அச்சிடுவது, இந்தியாவில் எந்த ரூபாய் நோட்டு செல்லும் செல்லாது என்று தீர்மானிப்பது போல பல தரப்பட்ட நாட்டின் நிதி சம்பந்தப்பட்ட சிக்கலான சேவைகளையும் செய்து வருகிறது.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி