திரையைச் சிந்தனைக் களமாக ஆக்கிய இயக்குநர்
திரையைச் சிந்தனைக் களமாக ஆக்கிய இயக்குநர்
அழகியலையும் பொருளியலையும்
அறிந்து
கலை செய்த கலைஞன்
வசனங்களில்
பொதுவுடமைக் கருத்துக்களைப்
பதியம் இட்ட படைப்பாளி
இதயம் முழுவதும்
மானுட நேசம் நிறைந்த மனிதன்
சந்திக்கும் ஒவ்வொருவரையும்
நண்பராகப் போற்றும்
அன்பன்
இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன்
மறைந்தார் என்ற
செய்தி
மனதை வாட்டுகிறது.
இயற்கை,
ஈ,
பேராண்மை,
புறம்போக்கு என
அவர் உருவாக்கிய படைப்பு ஒவ்வொன்றுமே
திரையில் செதுக்கிய
கல்வெட்டு.
கனமான இதயத்தோடு
விடை தருகிறோம் தோழனே...
லாபம் என்று எழுதிக் கணக்கைத் தொடங்குவது நம் மரபு
நீ முடித்துக் கொள்கிறாயே
என்ன நியாயம் இது?
*
_ இயக்குநர் பிருந்தா சாரதி
Comments
எல்லா கணக்கும் விதிப்படியே
ஒரு நாள்
நில்லா கணக்கு என்பதே
உலகின் நிலையாமை தத்துவமாம்
பொல்லா உலகின் மாயை
விலகியே மனத் திண்மையால்
நல்லார் என்றே பேர் எடுத்தால்
செல்லும் கணக்காம் சரித்திரமே.
வல்லமையாளர் ஜனநாதன் திரை
உலக மாந்தர் உள்ளங்களை
இல்லமாக்கி நீங்கா நினைவுடன்
எல்லோரும் போற்ற வாழ்வாரே.
எல்லா கணக்கும் விதிப்படியே
ஒரு நாள்
நில்லா கணக்கு என்பதே
உலகின் நிலையாமை தத்துவமாம்
பொல்லா உலகின் மாயை
விலகியே மனத் திண்மையால்
நல்லார் என்றே பேர் எடுத்தால்
செல்லும் கணக்காம் சரித்திரமே.
வல்லமையாளர் ஜனநாதன் திரை
உலக மாந்தர் உள்ளங்களை
இல்லமாக்கி நீங்கா நினைவுடன்
எல்லோரும் போற்ற வாழ்வாரே.