உலக பொம்மலாட்ட தினம்

 உலக பொம்மலாட்ட தினம்





🎭
ஜப்பானின் ஹினா-மட்சுரி தினத்தைப் போல இந்தியாவில் நவராத்திரி கொலுவை முன்னிட்டு, விதவிதமான பொம்மைகளை அடுக்கி கொண்டாடுவதைப் பார்த்திருப்பீர்கள். களிமண்ணால் செய்யப்பட்ட இந்தப் பொம்மைகள் அடுக்கப்பட்ட காட்சி கண்களுக்கு விருந்தாக இருக்கும்.
பொம்மைகளை நூலில் கட்டி கதை சொல்லும் பாரம்பரிய கலை நம் நாட்டில் வழக்கில் உள்ளது. இலங்கை, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளிலும் பிரபலமான இந்தக் கலையை, பொம்மலாட்டக்கலை எனச் சொல்கிறார்கள். மரம், தோல், துணி இவற்றாலான பொம்மைகளை நூலில் கட்டி, திரைக்கு மறைவில் இயக்குவதன் மூலம் கதை சொல்லப்படுகிறது.
கதைகள், பாட்டு, இதிகாசங்கள் மட்டுமன்றி ஆசிரியர்கள் தங்கள் மாணவர் களுக்குப் பாடம் சொல்லித்தரும் கலையாகவும் இந்தப் பொம்மலாட்டக்கலை இருந்திருக்கிறது. தற்போது அழிந்து வரும் இக்கலையின் பெருமையை உணர ‘உலக பொம்மலாட்ட தினம்’ மார்ச் 21 அன்று கடைப்பிடிக்கப் படுகிறது.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி