ரஜினியுடன் நடிக்காத ஒரே நடிகை
சினிமாவுக்கு வந்து 38 வருஷமாகியும் ரஜினியுடன் நடிக்காத ஒரே நடிகை
தமிழ் சினிமாவுக்கு 1983 இல் வந்து தற்போது வரை பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் அந்த எவர்கிரீன் நாயகி இதுவரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை என்ற செய்திதான் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சினிமா வளர்ச்சி பற்றி சொல்லி தெரிய வேண்டியதில்லை. வில்லனாகவும் ஹீரோவாகவும் ரசிக்கப்பட்ட நடிகர்களில் முக்கியமானவர் ரஜினிகாந்த். அதுவும் 40 வருடத்திற்கு மேலாக தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகராக வலம் வருவதென்றால் சும்மாவா.
இப்போதும் ரஜினி படங்கள் வெளியாகும்போது கூட்டம் கூட்டமாக ரசிகர்கள் தியேட்டரை நோக்கி படையெடுப்பதை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். இப்போது இருக்கும் நடிகைகளே ரஜினியுடன் நடிக்க வேண்டும் என ஆர்வமாக இருக்கும் நிலையில் அப்போது இளம் மொட்டாக இருந்த அந்த நடிகை எப்படி மிஸ் செய்தார் என்ற கேள்விதான் கோலிவுட் வட்டாரங்களில் எழுந்துள்ளது.
அவர் வேறு யாரும் இல்லை. நம்ம ஊர்வசி தான். தென்னிந்திய சினிமாவில் எப்பேர்பட்ட கதாபாத்திரம் கொடுத்தாலும் தன்னுடைய சுறுசுறுப்பான துறுதுறுப்பான நடிப்பால் ரசிகர்களை கவரும் வகையில் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்துவதில் கில்லாடிதான் ஊர்வசி.
பெரும்பாலும் ஊர்வசி நடிக்கும் கதாபாத்திரங்கள் காமெடி கலந்திருப்பதால் ரசிகர்கள் அதிகம் விரும்பினார். அதேபோல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மாஸ் ஹீரோவாக இருந்தாலும் காமெடி காட்சிகளில் பின்னி பெடல் எடுப்பார். அப்படிப்பட்ட இருவரும் இணைந்து ஒரு படத்தில் கூட நடக்கவில்லை என்பதுதான் ஆச்சரியமாக உள்ளது.
அந்த காலகட்டத்தில் இருந்த இயக்குனர்கள் இதை ஏன் யோசிக்க வில்லை என இப்போது ரசிகர்கள் வருந்துகின்றனர். ஒருவேளை ரஜினி மற்றும் ஊர்வசி கூட்டணியில் ஒரு படம் வெளிவந்திருந்தால் கண்டிப்பாக அது மறக்க முடியாத படமாக அமைந்திருக்கும் என்பதே பெரும்பாலான ரசிகர்களின் கருத்தாக உள்ளது.
Comments