கமலா தாஸ்.
கமலா தாஸ் என்ற இயற்பெயரைக் கொண்ட கமலா சுராயா அல்லது மாதவிக்குட்டி தெரியுமில்லையா?… மூன்று மொழிகளில் பேசுகிற-இரண்டு மொழிகளில் எழுதுகிற ஆனால் ஒரே மொழியில் கனாக் காண்கிற ” அந்த இந்திய எழுத்தாளர் ஆங்கிலம், மற்றும் மலையாளத்திலும் ஏராளமான சிறுகதைகள் மற்றும் கவிதைகளை எழுதியவர். கேரளாவில் இவரது சிறுகதைகள் மற்றும் இவரது தன் வரலாறு (என் கதா) ஆகியவை சர்வதேச புகழ் புகழ் பெற்றவை.
1934ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி, கேரளத்தின் திருச்சூர் அருகிலுள்ள நாலாப்பட்டு தறவாட்டில், மாத்ருபூமி நாளேட்டின் நிர்வாக ஆசிரியரான வி.எம்.நாயர் என்பவருக்கும், கவிஞர் பாலாமணியம்மாவிற்கும் மகளாகப் பிறந்தவர் ஆமி என்று சிறுவயதில் அழைக்கப்பட்ட மாதவிக்குட்டி. மலையாளத்தில் மாதவிக்குட்டியாகவும் ஆங்கிலத்தில் கமலாதாஸ் ஆகவும் அறியப்பட்ட இவருடைய ‘என் கதை’என்ற தன்வரலாற்று நூல் இந்தியாவிலேயே மிக அதிகமாக விற்பனையானதாகக் கூறப்படுகிறது. அந்நூல் பலவிதமான சர்ச்சைகளுக்கு உள்ளானது. அதில் தன்னுடைய பாலியல் பரிசோதனைகளை கிளர்ச்சியூட்டும்படி எழுதியிருந்தார். இளவயது ‘தோழனின்’ விந்துவின் வாசனையைப்பற்றிய வருணனைகள் அவரை புகழ்பெறச்செய்தன. இந்த நூல் மலையாளத்தில் “என்டே கதா” என்ற பெயரில் வெளியிட்ட வருடம் 1973. அப்போது, கமலாதாஸூக்கு வயது 39. இரண்டு குழந்தைக்கு தாய். கணவனோடு வாழ்ந்து வருபவர். இப்படிப்பட்ட குடும்பப் பின்னனியில் இருப்பவர், தனது பதின்ம வயதில் அனுபவம் தொடங்கி, திருமணம் உறவு, அந்தரங்க காதல், காமம் என்று அனைத்தும் துணிவோடு பகிர்ந்து இருந்தார்.
ஆனால் கற்பு, கலாச்சாரம் இன்னபிறவற்றினால் இயக்கப்படும் நமது ஆச்சாரப்பசுக்கள் அந்நூல் மிகையான பாலியலைப் பேசியதாகக் கண்டனம் தெரிவித்தனர். ஆனாலும் ‘இது’குமுதத்திலும் தொடராக வந்தது.
“‘என் கதை’யைப் படித்து பலரும் அதிர்ந்துபோனதாகச் சொல்லப்படுகிறதே…” என்று ஒரு பத்திரிகையாளர் கேள்வி எழுப்பியபோது, “அதிர்ந்துபோனதுபோல பாசாங்கு செய்தனர்”என்று பதிலளித்தார் கமலாதாஸ். ஆன்மாவின் அடியாழத்திலிருந்து புறப்பட்டு வந்த பதிலாக அது அமைந்திருந்தது. ‘நாம் புனிதமானவர்கள், கண்ணுக்குத் தெரியாத வரையறைகளுக்குக் கட்டுப்பட விதிக்கப்பட்டவர்கள்’ போன்ற பொய்மைகளைத் துகிலுரிந்து காட்டியது அந்தத் துணிச்சலான பதில்.
அவர் சொல்கிறார்:
“என் வாழ்வின் இரகசியங்கள் எல்லாவற்றையும் எழுதி என்னைக் காலி உடம்பாக ஆக்கிவிடவேண்டும் என்பதற்காகவே எழுதுகிறேன்” என்று.
தனது 67-வது வயதில் இஸ்லாமிய மதத்திற்கு மாறிய கமலா தாஸ் 2009 மே 31-இல் கமலா சுரையாவாக இறந்தார். சாகித்ய அகாடமி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வென்ற இவர் குழப்பவாதியாகவும், உணர்ச்சிகளால் அலைக்கழிக்கப்படுபவராகவும், கனவு காண்பவராகவும், தத்தளிக்கும் மனோநிலையுடையவராகவும் சித்தரிக்கப்பட்டார்.
பெண்ணியம் சார்ந்த கருத்துக்களை பிரதிபலிக்கும் எழுத்துக்கள் அவருடையது எனினும் தன்னை பெண்ணியவாதி என்ற அடைமொழிக்குள் சிக்க வைப்பதை கமலா தாஸ் வெறுத்தார். புனைவெழுத்தில் மிகச் சிறந்த திறன் பெற்றவர் கமலா தாஸ். தன் சுயத்தை தன் அடையாளத்தை எழுத்தின் மூலம் துணிச்சலாக உலகிற்கு கூறியவர். பெண்ணுலகம் சார்ந்த பல விஷயங்கள் பொதுப் புத்தியில் படிந்திருந்த காலகட்டத்தில் மிகத் துணிவாக பலரும் பேசத் தயங்கிய விஷயங்களைப் பேசத் துணிந்தார். பெண்ணடிமைத்தனத்தை எதிர்த்து எழுத்தில் சாடினார். பெண்கள் என்றால் மென்மையானவர்கள், ஏமாளிகள், அவர்களது பலவீனத்தைப் பயன்படுத்தி எளிதாக அவர்களை வசப்படுத்திவிடலாம் போன்ற வாதங்களை கமலாவின் எழுத்துக்கள் மறுதலித்தே வந்தன.
ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதாவது ஒரு அதிர்வை ஏற்படுத்தியவாறு தான் கமலா தாஸின் வாழ்க்கை நகர்ந்தோடியது. புறக்கணிப்பு, தனிமை, அலைக்கழிப்பு, மன உளைச்சல் எனப் பலவிதமான அகம் சார்ந்த பிரச்னைகளிலிருந்து மீள படைப்புலகைத் தேர்ந்தெடுத்தவர் கமலா. தனது 65-வது வயதில் தான் பெரிதும் நம்பிய ஒரு விஷயத்துக்காக, உயிரை விட மேலதிகமாக நேசித்த ஒருவருக்காக மதம் மாறவும் துணிந்தார் கமலா தாஸ். கமலா சுரையா என்று தன்னுடைய பெயரை அதற்காகவே மாற்றிக் கொண்டார்.
தன்னுடைய சுயசரிதையில் சிறுமியாக இருந்த காலம் முதல் திருமணம் அதன் பின்னான சில சிக்கல்கள், பணக்கார வாழ்க்கையின் வெறுமை போன்றவற்றை தனது எழுத்தாளுமையால் மிக அழகாக சொல்லியிருப்பார் கமலா. இந்தப் புத்தகத்தை ஆங்கிலத்தில் எழுதி மலையாளத்தில் மொழிபெயர்த்து இரண்டு மொழிகளிலும் வெளியிட்டார். அந்தப் புத்தகத்தில் பெண்ணுடல் சார்ந்தும் தாம் சார்ந்த மலையாளச் சமூகத்தைப் பற்றியும் பட்டவர்த்தனமாக பல விஷயங்களை உரத்த தொனியில் எழுதியிருப்பதால் இந்தப் புத்தகத்தை தடை செய்யக் கோரினர். அவரது உறவினர்களில் பலரே அப்புத்தகத்திற்கு எதிராக இருந்தனர். ஆனால் கமலா தாஸின் ரசிகர்கள் இந்தப் புத்தகத்திற்காகவே இன்றளவும் அவரை ஆராதிக்கின்றனர். ஒருவர் வார்த்தைகள் மூலமாக மட்டுமே இந்தளவுக்குத் தன்னையும் வாழ்க்கையையும் கொண்டாட முடியுமா என்பதற்கு உதாரணமாக திகழ்ந்தார் கமலா தாஸ்.

இணையத்தில் இருந்து எடுத்தது
Comments