மகளிர் தினம்! /மாதவராய்ப் பிறந்த மாதவம் செய்திட வேண்டும்

 மகளிர் தினம்!





















மாதவராய்ப் பிறந்த மாதவம் செய்திட வேண்டும்! உண்மைதான்! மாதர் தின வாழ்த்துக்களை ஏற்கும் முன்பு! இன்று வயது வித்தியாசமின்றி செய்யப்படும் வன்புணர்வுகளும், அற்ப காரணத்துக்காக நடைபெறும் கொடூர கொலைகளும் தினசரி செய்தித்தாள்கள் அலறிய வண்ணமே இருக்கின்றன! தொலைக்காட்சி பெட்டியிலும் நடந்த இழிசெயல்களைப்பற்றி விவாதம் என்ற பெயரில் ஒரு கூத்து அரங்கேறுகிறது! எல்லாவற்றையும் பார்த்துவிட்டு கடந்து போய்க் கொண்டுதானிருக்கிறோம்! வயதில் இளையவர்கள், சற்றே முதிர்ந்த வயதுடையவர் என குற்றத்தில் ஈடுபடுபவர்கள் பலதரப்பினர்! ஒரு வக்கிரம்பிடித்த மனநிலையை உடையவர் மட்டுமே செய்யக்கூடிய காரயம்! ஏன் எதனால்? என்று ஆராயுமுன்னர் அவர்கள் சற்றே மனநிலை ஆரோக்கியமானவர்களாக இல்லை! அவர்கள் செய்யும் குற்றங்களை நியாயப் படுத்தவில்லை! ஆனால் ஒருவர் திடீரென குற்றம் செய்யும் மனநிலைக்கு மாறுவதில்லை! பெண்பிள்ளைகளுக்கு ஒழுக்கம் சொல்லிக் கொடுத்து, தற்காத்துக்கொள்ளவும் சொல்லிக்கொடுக்கும் அதே சமயம், ஆண் குழந்தைகளையும் நெறிப்படுத்தி வளர்க்க வேண்டியது பெற்றவள் கையில் தான் பெரும்பாலும் இருக்கிறது! சிறு குழந்தையிலிருந்து, நன்னெறி போதிக்கப்பட்டு, அன்பான சூழ்நிலையில் வளர்க்கப்படும் குழந்தைகள் பெரும்பாலும் தவறு இழைப்பதில்லை! விதி விலக்குகள் இருக்கலாம்! இன்று குற்றம் செய்தவரை கடுமையாகச்சாடுகிறோம்! நானும்தான். ஆத்திரம் வருகிறது! எப்படி எப்படி எல்லாமோ தண்டனை கொடுக்க வேண்டும் என மனம் துடிக்கிறது! இருக்கட்டும்! ஆனால் குழந்தைகள் ஆரோக்கியமான மனநலத்துடன் வாழ இந்த சமூகத்திற்கு பெரிய பொறுப்பு இருக்கிறது! சமூகம் என்பது நம்மையும் சேர்த்தே! அவ்வளவு எளிதில் நம் பொறுப்பை நாம் உதறமுடியாது! அதுவும் ஒரு குடும்பத்தில் பெண்களின் பொறுப்பு மிக அதிகம்! குழந்தைகளின் குணங்களை நெறிப்படுத்துவதில்! பாட்டிமார் சொல்வதுண்டு,"நான் ஓதுறதை ஓதிட்டே இருக்கேன்பா!" என்று. அதன்படிநல்ல விஷயங்களை சலிப்பில்லாமல் குழந்தைகளுக்கு எடுத்துக்கூறிக்கொண்டே இருக்க வேண்டும். ஆண்பிள்ளைகள் வளர்ப்பில் இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும்! அவன் பின்னாளில் அவனைச் சார்ந்து வரும் ஒரு பெண்ணை தகுந்த மரியாதையுடன் நடத்தி, குடும்பத்தை கொண்டு செல்லும் தைரியமுடையவனாக இருத்தல் வேண்டும்! ஆண் குழந்தைகளின் கவனம் இலகுவாக வேண்டாத விஷயங்களில் படியும்! அந்த அடோலசென்ட் ஏஜ் என்பது அவனுக்கு ஒரு நல்ல வழிகாட்டுதலில்லாமல் கடந்துவிடுவது கடினம்! அந்த நாட்களின் தடுமாறும் மனது, அலைபாயும் புத்தி இதற்கெல்லாம் ஒரு நல்ல அன்பினால் ஆளுமை செய்யும் பொறுமை மிகுந்த ஒரு நபர் தேவை! அது பெற்ற தாயோ, பாட்டியோ , அத்தையோ ,சித்தியோ என அவனைக் கவர்ந்த ஒருவராய் இருத்தல் சிறப்பு! கூட்டுக் குடும்பங்கள் சிதைந்து விட்ட இந்தக் காலத்தில் முழுப்பொறுப்பும் பெற்றோர் கையில்! அதிலும் பெண்ணின் பொறுப்பு மிகப்பெரியது! திருக்குறள் - பெண் பெண்ணிற்கு மிகப் பெரிய பொறுப்பை தருகிறார் வள்ளுவர். பெண்ணை மிக உயர்ந்த இடத்தில் வைத்துப் போற்றுகிறார். பெண் என்பவள் யார் என்ற கேள்விக்கு வள்ளுவர் விடை தருகிறார். தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண். தன்னை மட்டுமல்லாமல் வீட்டிலுள்ளவர்களையும் காக்கும் பொறுப்பு பெண்ணுக்கு! காப்பது என்றால் உடல் நலம் மட்டுமன்று, மனநலத்தையும் காப்பவள்! பெண்ணுக்கு இயல்பாகவே உறுதியான மனம் ! நாலடியாரில் கூட பெண்ணின் கற்பு என்பது அவளது சிதறிடாத உறுதியான மனம், எண்ணம், செயலைக் குறிக்கிறது! எனவே இந்த மாதர் தினத்தில் ஒவ்வொருவரும் குற்றமில்லாத குணமுடைய குழந்தைகளை வளர்ப்பது நமது பொறுப்பே என உறுதி எடுப்போம்! ஒரு குற்றமற்ற ஆரோக்கியமான சமுதாயம் அமைய இன்றிலிருந்து பாடுபடுவோம்! Women are Allways Stronger!






Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி