உலக வன உயிர்கள் பாதுகாப்பு நாள்*
மார்ச் 3 - *உலக வன உயிர்கள் பாதுகாப்பு நாள்* 'வனம் மற்றும் வன விலங்கு பாதுகாப்பில் இளைஞர்களின் பங்களிப்பு அவசியம்' என ஐ.நா., சபை அறைகூவல் விடுத்துள்ளது.. வன விலங்குகள் மற்றும் வனத்தில் உள்ள முக்கிய தாவரங்களைப் பாதுகாப்பது; அவற்றின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது இந்நாளின் நோக்கம். இயற்கை சமநிலை ஒரு சிற்றினம் அழியும் போது அல்லது, அதன் எண்ணிக்கை குறையும் போது பெரிதும் பாதிக்கப்படுகிறது. இதற்கு காரணம் உணவு சங்கிலியும், உணவு வலையும் பெரிய அளவில் பாதிக்கப்படுவதே ஆகும். சூழல் சமநிலையை நிலைபெற செய்ய, வனவுயிரினங் களையும், அதன் சூழல் அமைப்பையும் பாதுகாக்க வேண்டும்.
Comments