உலக இட்லி தினம்
இன்னிக்கு வேர்ல்ட் இட்லி டே!30.3.20221
கடந்த 30-03-2015 முதல் இந்த உலக இட்லி தினம் சென்னையில் கொண்டாடப்பட்டு வருது.
வருடந்தோறும் நாட்கள் தவறாமல் இட்லியைத் தான் உணவாக உண்டு வருகிறோம் ஆனால் மார்ச் 30ல் மட்டும் ஏன் இட்லி தினம் என்று கொண்டாடப்படுகிறது என்ற கேள்வி உங்களுக்கு எழுவது இயற்கைதான்.
இதோ அதற்கான பதில் இதே மார்ச் 30ல் தான் ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவில் தேசிய பாப்கான் தினம் கொண்டாடப்படுகிறது அதே போல சுவீடன் நாட்டிலும் இதே நாளில் தான் அவர்கள் நாட்டின் பாரம்பரிய உணவான அப்பம் தினம் கொண்டாடப்படுகிறது.
அதைப்போல நம் நாட்டின் பாரம்பரிய உணவான இட்லியின் புகழை உலகுக்கு பறைசாற்றும் நோக்கத்தோடு ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 30ஆம் தேதி உலக இட்லி தினமாக கடந்த 2015ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து கொண்டாடப்பட்டு வருது.
Comments