இனி அந்த மொழியில் பாடமாட்டேன்” - விஜய் யேசுதாஸ்
இனி அந்த மொழியில் பாடமாட்டேன்” - விஜய் யேசுதாஸ் அதிரடி அறிவிப்பு!
பிரபல பாடகர் யேசுதாஸின் மகன் விஜய் யேசுதாஸ். இவரும் தந்தையைப் போல பாட்டு பாடுவதில் சிறந்து விளங்கி வருகிறார்.
இவர், தனுஷின் 'மாரி' படத்தில் வில்லனாக நடித்திருந்தார். தமிழில் வெளியான 'படைவீரன்' படத்தில் ஹீரோவாக அறிமுகமாகினார்.
மலையாள சினிமாவில் பாடகராக அறிமுகமான விஜய் யேசுதாஸை அந்த மக்கள் பெரிதாகக் கொண்டாடவில்லை. ஆனால், தமிழ் சினிமாவிலும் தெலுங்கு சினிமாவிலும் விஜய் யேசுதாஸ் கொண்டாடப்பட்டார்.
அண்மையில், இனி மலையாள சினிமாவில் பாட போவதில்லை என்று விஜய் யேசுதாஸ் தெரிவித்திருப்பது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறுகையில், “நான் இனிமேல் மலையாள படங்களில் பாட்டுப் பாட மாட்டேன். மலையாள திரையுலகில் இசைக் கலைஞர்களுக்கு மதிப்பும், மரியாதையும், அங்கீகாரமும் இல்லை. அதே சமயம் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் நல்ல மதிப்பு உள்ளது. அதனால் இனி தமிழ், தெலுங்கு திரையுலகில் தான் வேலை செய்யப் போகிறேன்” என்றார்.
நன்றி: நக்கீரன்
Comments