ஆவியால் அவித்த அழகி / இட்லி தின கவிதை
ஆவியால் அவித்த அழகி
இட்லி தின கவிதை
ஆளையே மயக்கும் நழுவி ஆகாயம் பூலோகம் அயல்நாடு உள்நாடு எங்கெங்கு தேடினாலும் கிடைக்காது உன்னைப் போல ஒரு சுவையான நிறமி.. கூட்டாளிகளுக்குத் தகுந்தபடி தன்னிலை மாற்றும் மாயவி... சட்னியானாலும் சாம்பாரானாலும் மிளகாய்ப் பொடியானாலும் அனைவரோடும் ஒத்துப்போகும் தன்னிகரில்லாத் தலைவி... நிலாவைப்போல வெள்ளை உன் ருசிக்கு இல்லை எல்லை... அனைத்து சத்துக்களையும் உள்ளடக்கியும் தலைக்கனம் ஏறாத மிருது உள்ளம்... தமிழ்நாட்டு காலை உணவின் கெத்து... "இட்லியே" நீ தான் எங்க பரம்பரை சொத்து... மார்ச்-30: உலக இட்லி தினம்.
Comments