தேமல் பிரச்சனைக்கு தீர்வு தரும் மூலிகைகளும் பலன்களும்

 

தேமல் பிரச்சனைக்கு தீர்வு தரும் மூலிகைகளும் பலன்களும்...!!





# சில மூலிகைகள் உங்களுக்கு எந்தவிதமான பக்கவிளைவுகளும் இன்றி, தேமல் பிரச்சனைக்கு தீர்வு அளிக்கின்றன. அவற்றை நீங்கள் கடைகளில் தான் வாங்க  வேண்டும் என்பதில்லை. உங்களது வீட்டின் அருகிலேயே இருக்கும் மூலிகைகளை பயன்படுத்தி தேமல் பிரச்சனைக்கு தீர்வு காணலாம்.



# அருகம்புல்: அருகம்புல் உடல் நலத்திற்கும், இரத்தத்தை சுத்தம் செய்யவும் மிக முக்கியமாக பயன்படுத்தப்படுகிறது. அருகம்புல், கஸ்தூரிமஞ்சள், மருதோன்றி  போன்றவற்றை அம்மியில் வைத்து அரைத்து பூச தேமல் விரைவாக குணமாகும்.

 


# ஆரஞ்சு தோல்: கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் உலர்த்தி பொடி செய்து தினமும் உடம்பிற்கு தேய்த்து குளித்து வரவும். எலுமிச்சை பழச்சாறு தேமல் உள்ள  இடங்களில் தேய்த்தால் தேமல் மறையும்


 

# எலுமிச்சை தோல்: எலுமிச்சை தோலை உலர்த்தி தூளாக்கி சம அளவு பொரித்த படிகாரத்தை சிறிது தண்ணீர் சேர்த்து குழைத்து தேமலில் பூசி குளித்து வந்தால் தேமல் குறையும்

 


# மஞ்சள்: மஞ்சள் இடித்து நல்லெண்ணெய்யில் போட்டு காய்ச்சி தேமல் மேல் தேய்த்து வந்தால் தேமல் குறையும். துளசி இலை, வெற்றிலை எடுத்து அரைத்து தேமல் மேல் பூசினால் தேமல் நீங்கும்....

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி