கச்சேரி வித்வான்கள் போல் போஸ்

 சென்னையில் 1960 ல் நடந்த ஒரு திருமணத்தின் போதுதான் , ஆமர்க்களமான இந்த காட்சியைக் கிளிக் செய்திருக்கிறார்கள்.

இதில் சுவாரஸ்யமான விஷயம் அந்த நேரத்

தில் நடிகர் திலகம் கணேசனும் சரி , ஜெமினியும் சரி எந்தப் படத்திலும் நாதஸ்வரக்கலைஞராக நடித்ததில்லை.
இரண்டு பேரும் அந்தக் கல்யாணத்துக்கு வந்தபோது , அங்கே காருக்குருச்சி அருணாசலம் அவர்களின் கச்சேரி நடந்து கொண்டிருந்தது...
இரண்டு கணேசன்களுக்கும் காருக்குரிச்சியின் நாதஸ்வரம் என்றால் உயிர் .இருவரும் அமர்ந்து ஆனந்தமாய்க் கச்சேரியை ரசித்தார்கள்.
கச்சேரி முடிந்தவுடன் " அண்ணே அண்ணே நாதஸ்வரத்தக் குடுங்ஙண்ணே " என்று கணேசனும் ஜெமினியும் வாங்கிக் கொள்ள..இருவரும் கச்சேரி வித்வான்கள் போல் போஸ்பண்ண அங்கு வந்திருந்த இசையமைப்பாளர் ஜி.ராமநாதன் தவில்காரரிடமிருந்து தவிலைக் கைப்பற்றி பந்தாவாக அமர ஒரே அமர்க்களம்தான்...கணேசன் அருகே காருக்குரிச்சி.
இதற்குப் பிறகு பல வருடங்கள் கழித்துத்தான்
கொஞ்சும் சலங்கையும் தில்லானா மோகனாம்பாளும் வந்தன.
கொஞ்சும் சலங்கையில் ஜெமினி நாதஸ்வரத்தைப் பிடிக்க....அவருக்கு காருக் குறிச்சி நாதஸ்வரம் வாசித்தார்.
thanks

Kandasamy R

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி