ஞாயிறு திரை மலர், 28/02/2021
---------------------------------------------------------------------------------------------------------
பார்த்திபன் அவர்கள் சமூக வலையதளங்களில் அழகாய் எழுதி பல பதிவுகளை போடுவார். அந்த வகையில் கொரோனா நேரத்தில் டாஸ்மாக் திறப்பதை பற்றியும் மிக அழகாக முகநூலில் எழுதியுள்ளார். அதை தன் ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். அதில் வழக்கம் போல அவரின் கவரும் வார்த்தை கோப்புகள் இருந்தன. அவர் எழுதியதாவது. நாளை நமதே'என நினைத்திருந்தேன் TASMAC திறக்கும் வரை. இனி doubt தான். Social DR(Istanc)KING! பாருங்க..எழுத்துக்களே கொளருது!Bottle மூடியைத் திறந்தாலே போதையேறிகளுக்கு. கடையைத் திறந்தா? Immunity & community நாசமாப் போகும்.
நன்றி: பிலிம் பீட் தமிழ்
-------------------------------------------------------------------------------------------
ரஜினியை பொதுமேடையில் படுமோசமாக திட்டிய மனோரமா.. பதிலுக்கு கூப்பிட்டு உதவி செய்த சூப்பர் ஸ்டார்
ஆச்சி மனோரமா தமிழ் சினிமாவில் அந்தக்காலம் முதல் இந்தக்காலம் வரை 1000 படங்களுக்கு மேல் நடித்து சரித்திரம் படைத்த நாயகியாக வலம் வந்தார். குணச்சித்திர கதாபாத்திரங்களில் மனோரமாவை அடித்துக் கொள்ள ஆளில்லை.
இன்று மனோரமா போல் ஒரு நடிகை கிடையாது என்பது அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான். மேலும் மனோரமாவை பலரும் தங்களது குடும்பத்தில் ஒருவராக நினைக்கும் அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் விசாலமாக பரவி இருந்தார்.
அப்படிப்பட்ட மனோரமா ரஜினியை இவ்வளவு தரக்குறைவாக பேசியுள்ளார் என்ற சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனோரமா நடிகை மற்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கட்சியை சேர்ந்தவராம்.
படையப்பா படத்தின் போது ரஜினி மற்றும் ஜெயலலிதா ஆகிய இருவருக்கும் தொடர்ந்து மோதல்கள் ஏற்பட்டு வந்தது அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான். அந்த சமயம் ஜெயலலிதா ஆட்சி கவிழ காரணமாக இருந்தவரே ரஜினிகாந்த் தான். ரஜினி சொன்ன ஒற்றை வார்த்தைக்காக மொத்த ஓட்டும் வேறுபக்கம் விழுந்தது.
அப்போதைய பிரச்சார பேட்டியில் தான் ஒரு மேடையில் மனோரமா ரஜினியை மிகவும் தரக்குறைவாக மோசமாக பேசியுள்ளார். அதன் பிறகு சில வருடங்கள் தமிழ் சினிமாவால் மனோரமா புறக்கணிக்கப்பட்டாராம். தொடர்ந்து அவருக்கு சினிமா வாய்ப்புகள் தர தயாரிப்பாளர்கள் மறுத்து விட்டார்களாம்.
இந்நிலையில் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மனோரமா தன்னை தவறாக பேசியதை மனதில் வைத்துக் கொள்ளாமல் அவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்க உதவி செய்தாராம். அதன்பிறகு மனோரமா இப்படிப்பட்ட மனிதனை தவறாக பேசி விட்டோமே என குற்ற உணர்ச்சியில் இருந்ததாக கூறுகின்றனர்.
_________________________________________________________________________
கன்னியாகுமரி மாவட்டம் காட்டுப்புதூர் கிராமத்துக்கு அப்போது' பாவைக்கூத்து ' நடத்த ஒரு பிரபலமான ஒரு நாடகக் குழு வந்திருந்தது. அன்றைய தினம் அதே கிராமத்தில் மற்றொரு நாடகமும் நடந்தது. அதனை பார்க்க பாவைக்கூத்துக் குழுவும் அமர்ந்தது. நாடகத்தின் முக்கிய கதாபாத்திரம் ஒன்றிற்காக திரைக்குப் பின்னாலிருந்து ஏற்ற இறக்கங்களுடன் ஒருவர் குரல் கொடுத்துப் பாடினார் . அவர் பாடிய முறை அக்குழுவினருக்கு மிகவும் பிடித்துப் போனதால் குரல் கொடுத்த நடிகரை அழைத்து பாராட்டிய அவர்கள், அவரையும் தங்கள் குழுவில் இணைத்துக் கொண்டனர்.
அப்போது நாடக உலகுக்கும், பின்னாளில் திரையுலகுக்கும் திறமையான நடிகர் ஒருவர் கிடைத்தார். ஊர் ஊராக அந்தக் குழுவினருடன் சுற்றி நாடக அனுபவம்பெற்ற அவர்தான் பின்னாளில் வெடிச்சிரிப்பால் ரசிகர்களை அதிர வைத்த குமரி முத்துவாக மாறினார்.
சுயமரியாதை குணமும் திராவிடக்கொள்கையில் தீவிர பற்றும் கொண்டவர் குமரிமுத்து. சினிமாவில்தான் குமரிமுத்து. நாடக உலகில் அந்நாளில் அவரது பெயர் வாத்தியார் முத்து.
ஆயிரம் ஆயிரமாம் கலைஞர்களை கண்ட சினிமாவில் ஆச்சர்யமாக ஒரு சிலர் மட்டும் தங்களது அங்க சேஷ்டைகள் மூலம் ரசிகர்களிடையே புகழ்பெற்றவர்கள். அவர்களில் ஒருவர் குமரிமுத்து. “ஹாஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹாாா”... என அரைப்புள்ளி, கமா, முழுப்புள்ளி இன்றி ஒரு வார்த்தையை இழுத்து நீட்டி முழுக்கி சிரிப்பது என்பது அவரது பாணி. அவரது பெயரை குறிப்பிட்டால் நம்மையுமறியாமல் அவரது பாணியிலேயே ஒருமுறை சிரித்துவிடுவோம். அதுதான் குமரிமுத்து.
நகைச்சுவை நடிப்பில் மட்டுமல்ல, தேர்ந்த குணச்சித்திர நடிகராகவும் விளங்கிய குமரிமுத்து, சினிமாவுக்கு முதல்தலைமுறை நடிகர் அல்ல. அவரது சகோதரர் நம்பிராஜன் அந்நாளில் மேடை மற்றும் சினிமா பிரபலம்தான். பராசக்தியில் பூசாரியாக வருபவர்தான் குமரிமுத்துவின் சகோதரர். இவரது அண்ணியும் பிரபல நடிகையே. தாம்பரம் லலிதா என்றால் அந்நாளில் கொடுமையான அண்ணி, வெடுக் வெடுக் என பேசும் ஈவு இரக்கமற்ற பெண்மணி போன்ற கதாபாத்திரம் என்றால் அவர்தான் நினைவுக்கு வருவார். மீண்ட சொர்க்கம், பாகப்பிரிவினை, தெய்வப்பிறவி, உள்ளிட்ட படங்களில் தாம்பரம் லலிதாவின் நடிப்பு பிரபலம்.
-------------------------------------------------------------------------------------------------------------
ஸ்ரீகாந்த் ( பிறப்பு: பெப்ரவரி 28, 1979) தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத் திரைப்படங்களில் நடித்து வரும் ஓர் தென்னிந்திய நடிகர் ஆவார். இவரது அறிமுகம் 2002ஆம் ஆண்டில் வெளியான ரோஜாக்கூட்டம் என்ற தமிழ் திரைப்படத்தில் அமைந்தது. இவரது திரைப்படங்கள் பார்த்திபன் கனவு மற்றும் தெலுங்கில் ஆடவாரி மாடலாகு அர்தலு வெருலே பெரும் வெற்றிப்படங்களாக விளங்கின. தெலுங்குத் திரைப்படங்களில் இவர் ஸ்ரீராம் என்று அறியப்படுகிறார்.
ஸ்ரீகாந்த்தின் திரை நுழைவு ரோஜாக்கூட்டம் என்ற சசியின் காதல் படத்தில் பூமிகா சாவ்லாவுடன் அமைந்தது. முதல் திரைப்படமே வெற்றிப்படமாக அமைந்து பாராட்டுக்களையும் பெற்றுத் தந்தது. இவரது அடுத்த வெற்றிப்படமாக சினேகாவுடன் நடித்த ஏப்ரல் மாதத்தில் அமைந்தது. தொடர்ந்து கரு. பழனியப்பன் இயக்கத்தில் உருவான பார்த்திபன் கனவு இவருக்கு தமிழ்நாடு மாநில திரைப்பட சிறப்பு விருது கிடைத்தது. பின்தொடர்ந்த படங்கள் தோல்வியைத் தழுவ சிலகாலம் வாய்ப்புகள் இன்றி இருந்தார். 2007ஆம் ஆண்டில் செல்வராகவன் இயக்கத்தில் தெலுங்கில் நடித்த ஆடவாரி மாடலாகு அர்தலு வெருலே பெற்ற வெற்றியைத் தொடர்ந்து புகழ்பெற்ற இயக்குனர் சங்கரின் நண்பன் உட்பட பல புதிய படங்களில் நடிக்கத் தொடங்கினார்.
Comments