செமையாக தில் காட்டும் எடப்பாடியார்

 

 யாருமே எடுக்காத "ரிஸ்க்".



யார் என்ன சொன்னாலும் சரி... ஒரு விஷயத்தில் எடப்பாடி பழனிசாமியை பாராட்டியே ஆக வேண்டும்.. அவர் இப்போது எடுத்து வரும் ரிஸ்க், இதுவரை யாருமே அரசியலில் எடுக்காத ஒன்று..!

சசிகலாவின் வருகை மிக முக்கிய ஒன்றாக பார்க்கப்படுகிறது.. சசிகலாவின் அதிரடி இல்லாமல், தாக்கம் இல்லாமல், விளைவுகள் இல்லாமல், மாற்றம் இல்லாமல், வரும் சட்டசபை தேர்தலை சந்திக்க முடியாது என்ற நிலை உருவாகி விட்டது.

சசிகலாவின் லாபியை வைத்துதான் கடந்த 20 வருட கால அதிமுக நகர்ந்துள்ளது.. சசிகலாவுக்கு தெரியாத அதிமுக புள்ளிகளே இல்லை.. ஒரு ஒன்றிய செயலாளர் பெயர் உட்பட அவரது ஜாதகத்தை சசிகலா அறிந்திருப்பார்..

ஒவ்வொரு முறை தேர்தலின்போதும், வேட்பாளர்கள் லிஸ்ட் முதல் அமைச்சர்கள் வரை ஜெயலலிதாவுக்கு தரும் அளவுக்கு செல்வாக்கும் அதிகாரமும் பெற்றவர். அதனால்தான் அவர் இல்லாத இந்த 4 வருஷத்தில்கூட அவருக்கு எதிராக ஒருத்தர்கூட அதிமுகவில் கருத்து சொன்னதில்லை.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி உட்பட...!

இப்போது சசிகலாவின் வருகை எடப்பாடியாரை லேசாக அசைத்து பார்க்க ஆரம்பித்துள்ளது.. அவரது ரீ-என்ட்ரியால் தன்னுடைய முக்கியத்துவம் இழந்துவிடக்கூடும் என்ற கலக்கமும் சேர்ந்துள்ளது. ஆனால், ஒரு விஷயத்தில் எடப்பாடியார் தெளிவாக இருக்கிறார்.. அது தன் மீதான நம்பிக்கை மட்டுமே..

இந்த 4 வருடத்தில் துணை முதல்வர் அவருக்கு தராத குடைச்சலே இல்லை... இரட்டை தலைமை முதல் முதல்வர் வேட்பாளர் வரை அனைத்திலுமே பிரச்சனை வெடித்தது.. உட்கட்சி பூசல் பெருகியது.. திமுகவை ஒரு பக்கம் சமாளிக்க வேண்டி இருந்தது.. தன் பக்க ஆதரவாளர்களையும் விட்டு தராமல் அவர்கள் பக்கம் நிற்க வேண்டி இருந்தது.. மக்களிடமும் அதிருப்தியை பெற்றுவிடாமல், எதையாவது அறிவிப்புகள், திட்டங்களை அறிவித்து நன்மதிப்பை பெற வேண்டி இருந்தது.

இவ்வளவும் இந்த 4 வருடத்தில் ஒற்றை நபராகவே செய்து முடித்துள்ளார் எடப்பாடியார்.. யாருடைய தூண்டுதலுக்கும் அவர் ஆளாகவில்லை என்பது மிக மிகமுக்கியமான விஷயம்.. ஒருகட்டத்தில், அதாவது இடைத்தேர்தலின்போது பாஜகவை கழட்டிவிட்டு தேர்தலை சந்திக்கவும் துணிந்தவர்.. பாஜக பக்கம் முழுவதுமாக தன்னை சாய்த்து கொள்ளாதவர்.. இப்படி தன்னை மட்டுமே நம்பி இந்த 4 வருட அரசியலை செய்தது ஒன்றுதான், சசிகலாவை ஏற்க மனமில்லாமல் உள்ளதாக தெரிகிறது.

சசிகலா தந்த பதவி இது என்றாலும், அதை துஷ்பிரயோகம் செய்யாமல், மக்கள் நலனுக்காகவே செய்து தனக்கான ஒரு மாஸ் கிரியேட் செய்துள்ளதாகவும் எடப்பாடியார் கருதுகிறார்.. இதுபோக தன் சமுதாய மக்களும், தன் ஆதரவாளர்களும் கைவிடமாட்டார்கள் என்ற அதீத நம்பிக்கையும் வைத்துள்ளார்.. ஒருவேளை இவர் சசிகலாவுடன் இணைய கடைசி வரை சம்மதிக்காவிட்டாலும், தனித்து களம் கண்டாலும், எடப்பாடியாருக்கான தனி மதிப்பும், செல்வாக்கும் நிச்சயம் அவரை கைதூக்கிவிடும் என்றும் சொல்லப்படுகிறது.

thanks https://tamil.oneindia.com/

Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி