உன் வாழ்வில்..
உன் வாழ்வில்..
அலங்காரமான அவமானங்கள்
உன் விழிவாசலில்..
தோரணமாகவே தொங்கட்டும்.
உன் வெற்றிக்கு வழிகாட்டும்
தோல்வியை விட..
உன் செருக்கோடு கலக்கும்
அவமானங்கள்..
உறங்கவிடாமல் உன்
வலிக்கு சலங்கை பூட்டட்டும்.
சாதித்துக் காட்டப் போகும்
உன் வெறித்தனத்திற்கு
யாகம் வளர்க்க..
அவமானங்களையே கொளுத்து.
உன் வெற்றியை பாராட்ட
முதல் வரிசையை..
அவமானத்திற்கே முன்பதிவு செய்.
அசிங்கமான அவமானங்களை
அடையாளமாக மட்டுமல்ல..
ஆடையாகவும் ஆக்கிகொள்.
அவமானங்களை கடந்த அனுபவம்
உன் சாதனைக்கும் மகிழ்ச்சிக்கும்
வழி சொல்லும் மைல் கல்.
பார்த்துக்கொண்டே பயணி.
பரவசத்தோடு கவனிக்க..
ஊர் உன் பின்னே வருகிறது பார்.
Comments