அது ஒரு ஆழ் கிடங்கு

 அது ஒரு ஆழ் கிடங்கு

--கவிதை

















அமைதியாய் உறங்குகிறது.. உறங்குகிறதா இல்லையே ஏதோ சத்தம் கேட்கிறது முணுமுணுக்கிறதா எட்டிப்பார்க்கவா இல்லையே இருட்டாக உள்ளதே பயமாக இருக்கிறதா இல்லை - ஓ அப்படியெனில் ஏன் வியர்க்கிறது தெரியவில்லை வலிக்கிறதா இல்லை நிச்சயமாக இது வலி இல்லை குரல் கொடுத்து பார்ப்போமா? பதில் இல்லையெனில்... குளிர்கிறதே உடலெங்கும் உஷ்ணம் குறைகிறதே ஐயோ என்ன இது நான் பறக்கின்றேன் பேரண்ட பெருவெளி என் கேள்விகள் எங்கே? மடையனே கேள்விகளிற்கு இங்கென்ன வேலை யாரது? நான் ஏன் இங்கு வந்தேன்? நீ தான் எட்டிப்பார்த்தாயே எட்டிப்பார்த்தால் விழுங்கிவிடுவாயா ? நீ தான் எனை தேடினாயே.. என்ன பிதற்றுகிறாய் நீ யாரென்றே தெரியாது எங்கிருந்து வந்தாய்? நான் வரவில்லை நீ தான் என்னுள் வந்திருக்கின்றாய் நீ எங்கே இருக்கின்றாய்? மூடனே உன்னுள் தான் இருக்கின்றேன் ஏன் இவ்வளவு நாள் உன்னை தெரியவில்லை நீ தேடவில்லை அதுதான் நானும் தெரியவில்லை நீ எனக்காக என் செய்வாய் எதுவும் செய்வேன் கட்டளை இடு அன்பாக அப்படியெனில் நீ யார் நீ தான் நான் நான் தான் நீ விளங்க வேண்டுமா ஆழ்மனம் என கொள் கட்டளை இடு உனக்காக - இப் பிரபஞ்சத்தில் நான் வேலை செய்வேன் உன்னை நகர்த்துவேன் உன்னை உயர்த்துவேன் அப்படியா அதற்கு நான் என்ன தர வேண்டும் நம்ப வேண்டும் என்னை நம்ப வேண்டும் என்னால் முடியுமென நம்பவேண்டும் சந்தேகமற நம்பவேண்டும் அதாவது உன்னை உன் ஆன்மாவை நீ நம்ப வேண்டும் விசுவாசிக்க வேண்டும் டினோஜா நவரட்ணராஜா(ஸ்ரீலங்கா)

Comments

Sumathi said…
அருமைடா
முடியும்னு நம்பிக்கை இருந்தாப் போதும் எதையும் சாதிக்கலாம்
Sumathi said…
அருமைடா ❤
நம்பிக்கை தான் எல்லாமும்
Sumathi said…
அருமைடா ❤
நம்பிக்கை தான் எல்லாமும்

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி