சந்திரசேகர ஆசாத்.!
சந்திரசேகர ஆசாத்.!
பகத்சிங்கை "தம்பி இன்குலாப்.!"என்று அன்புடன் அழைத்தவர்.
இந்திய வரலாற்றிலேயே முதல்முறையாக ஒரு புரட்சிக்காரனை பிடிக்க முடியவில்லை என்று ஆங்கில அரசு கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்த புகழுக்கு சொந்தக்காரர்.
மாறுவேடமிடுவதில் கில்லாடி.சாண்டர்ஸனை சுட்டு விட்டு தப்பிய பகத்சிங்கை பிடிக்க முயன்ற கான்ஸ்டபிள் சனான்சிங்கை சுட்டு தள்ளி பகத்தை தப்பிக்க வைத்தவர்.
அலகாபாத்பூங்கா ஒன்றில் நண்பர்களை சந்திக்க காத்திருந்தவரை துரோகி ஒருவன் காட்டிக் கொடுக்க போலீஸ் சுற்றி வளைத்தது.
உத்திரபிரதேச காவல்துறை உயர் அதிகாரியாக பணியாற்றிய ஹார்லிஸ் என்பவர் தனது ‘பணிக்கால நினைவலைகள்’ என்ற தலைப்பில் (1958 அக்டோபர் மாத ‘Men only’ ஆங்கில மாத இதழில்) ஆசாத்தை சுட்டுக் கொன்ற நிகழ்ச்சி குறித்து கீழ்க்கண்டவாறு எழுதியுள்ளார்.
"ஆசாத்தின் முதல் துப்பாக்கிக் குண்டு வெள்ளைக்கார காவல்துறை கண்காணிப்பாளர் நாட்பாவர் கையைப் பதம் பார்த்தது. காவலர்கள் புதர்களில் மறைந்திருந்து ஆசாத்தை குறிபார்த்துச் சுட்டனர்.
மற்றொரு காவல் துறை கண்காணிப்பாளர் விஸ்வேஸ்வரர்சிங் குறிபார்த்துச் சுட்டார். தனது உடலில் மூன்று, நான்கு குண்டுகள் துளைத்துக் குருதி ஒடிக் கொண்டிருந்த நிலையிலும், தன்னைச் சுட்ட விஸ்வேஸ்வர்சிங்கின் முகத்தைக் குறிபார்த்துச் சுட்டு அவரது தாடைகளைச் சிதறடித்தார்.
ஆசாத்தின் கடைசியானதும், ஆனால், பாராட்டுக்குரியதுமான செயல்திறமை அவர் குறி தவறாமல் சுடுவதே" என்று குறிப்பிட்டுள்ளார்.ஆசாத்தின் மீதிருந்த பயத்தால் மூன்று மணி நேர காத்திருப்புக்கு பிறகு இறப்பு உறுதியான பின்பே உடலை நெருங்க முடிந்தது.!
ஆசாத்தை சுட்டுத் தள்ளிய ஆர்பர்ட் பூங்காவில் இருந்த மரத்தில் துப்பாக்கிக் குண்டுகள் பதிந்தன. அந்த மரம் மக்களின் தெய்வமானது. பல்லாயிரக்கணக்கான இளைஞர்களும், பொதுமக்களும் வந்து மரத்தை வணங்கி மரியாதை செலுத்தினர்.
எரிச்சலுற்ற பிரிட்டிஷ் அரசு அந்த மரத்தையே வெட்டி வீழ்த்தியது!தீரமாக போராடி மரித்த போது February 27, 1931ஆஸாத்தின் வயது பகத்தை போலவே இருபத்தி நான்கு.!
இணையத்தில் இருந்து எடுத்தது
Comments