மூன்றே நாட்களில் மொத்த உடலையும் சுத்தம் செய்ய
மூன்றே நாட்களில் மொத்த உடலையும் சுத்தம் செய்ய வேண்டுமா? இதை மட்டும் செய்தால் போதும்.
நாம் சாப்பிடும் உணவுகள் மூலம் உடலினுள் ஏரளமான நச்சுகள் செல்கிறது, இதன் காரணமாக பல்வேறு உடல் ரீதியான பிரச்சினைகள் ஏற்படுகிறது.
எனவே நமது உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றி, நோய் தொற்றுக்களின் அபாயத்தை குறைக்க நமது ஒட்டுமொத்த உடலை சுத்தம் செய்வது மிகவும் அவசியமாகும்.
அந்த வகையில் வெறும் மூன்று நாட்களில் நமது உடலை சுத்தம் செய்வதற்கான அற்புத வழிகள் குறித்து காண்போம்.
நினைவில் கொள்ள வேண்டியவை
ஒட்டுமொத்த உடலையும் சுத்தம் செய்வதற்கும் 2 நாட்களுக்கு முன்பே பால் பொருட்கள் உண்பதை முற்றிலும் தவிர்க்க விட வேண்டும். ஏனெனில் பால் பொருட்கள் செரிமானத்தை தாமதப்படுத்தும்.
உடலை சுத்தமாக்க என்ன செய்ய வேண்டும்?
உடலை சுத்தம் செய்வதற்கும் முதல் நாள் காலை உணவிற்கு முன் 1/2 டம்ளர் நீரில், 2 எலுமிச்சையைப் பிழிந்து குடிக்க வேண்டும்.
காலை உணவு சாப்பிட்ட பின் 1 1/2 டம்ளர் அன்னாசிப்பழ ஜூஸ் குடிக்க வேண்டும். இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் சுவாச மண்டலத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.
காலை உணவு மற்றும் மதிய உணவிற்கு இடைப்பட்ட காலத்தில் 1 1/2 டம்ளர் கேரட் ஜூஸ் குடிக்க வேண்டும். ஏனெனில் இது சுவாச பாதையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
மதிய உணவு வேளையில் 1 1/2 டம்ளர் வாழைப்பழம், அவகேடோ, பீட்ரூட் போன்ற பழத்தில் தயாரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு ஜூஸைக் குடிக்க வேண்டும். ஏனெனில் இதில் உள்ள பொட்டாசியம் சத்துக்கள் உடலை சுத்தம் உதவுகிறது.
இரவு உணவு உண்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் 1 டம்ளர் இஞ்சி, புதினா ஆகியவை கொண்டு டீயை செய்து குடிக்க வேண்டும். ஏனெனில் இது சளி, மூக்கடைப்பு போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
இரவில் தூங்கும் முன் 340 மிலி கிரான்பெர்ரி ஜூஸைக் குடிக்க வேண்டும். ஏனெனில் இது நுரையீரலில் உள்ள பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடி, தொற்றுகளின் தாக்கத்தில் இருந்து தடுக்கிறது.
குறிப்பு
மேலே கூறப்பட்டுள்ள செய்முறைகளின் படி, 3 நாட்கள் தொடர்ந்து பின்பற்றி வந்தால், உடலின் உள்ள அனைத்து நச்சுக்களும் வெளியேற்றப்பட்டு உடல் சுத்தமாவதை உணர முடியும்.
Comments