சபரிமலை பொன்னம்பல மேட்டில் மகர ஜோதி வடிவாய் சுவாமி ஐயப்பன்

 சபரிமலை பொன்னம்பல மேட்டில் மகர ஜோதி வடிவாய் சுவாமி ஐயப்பன் காட்சி அளித்தார். பக்தர்கள் விண்ணதிர சரண கோஷம் எழுப்பினர்.



மண்டல, மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை கடந்த நவம்பர் மாதம் 15-ந் தேதி திறக்கப்பட்டது. பின்னர் 41 நாட்கள் சிறப்பு வழிபாடுக்கு பிறகு, கடந்த மாதம் 26-ந் தேதி மண்டல பூஜை நடந்தது. பின்னர் நடை சாத்தப்பட்டது

கொரோனா பரவல் காரணமாக மண்டல பூஜை காலங்களில் குறைந்த அளவு பக்தர்களே தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். இதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மண்டல பூஜை நிறைவு நாளில் மட்டும் 5 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

இந்த நிலையில் சிகர நிகழ்ச்சியான மகரவிளக்கு பூஜை இன்று நடைபெற்றது. மகரஜோதியை ஒட்டி ஐயப்பனுக்கு அணிவிக்கும் ஆபரணப் பெட்டி சரங்கொத்தி வந்தது . மன்னர் குடும்பத்தினரிடமிருந்து ஆபரணப் பெட்டியை தேசவம் போர்டு அதிகாரிகள் பெற்று தந்திரி, மேல்சாந்தியிடம் வழங்கினார்கள் . ஐயப்பனுக்கு ஆபரணங்கள் அணிவிக்கப்பட்ட பிறகு தீபாரதனை காட்டப்பட்டது.

மாலை 6.40 மணிக்கு சபரிமலை பொன்னம்பல மேட்டில் மகர ஜோதி வடிவாய் சுவாமி ஐயப்பன் காட்சி அளித்தார். பக்தர்கள் விண்ணதிர சரண கோஷம் எழுப்பினர். பொன்னம்பல மேட்டில் 3 முறை, அய்யப்பசாமி தீப ஜோதியாக பக்தர்களுக்கு காட்சி தருவார் என்பது ஐதீகம். வழக்கமாக ஜோதியை காண சபரிமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள். கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு 5 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.


Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி