ஶ்ரீவில்லிபுத்தூர் நாயகியின் தைலகாப்பு உற்சவம்
ஶ்ரீவில்லிபுத்தூர் நாயகியின் தைலகாப்பு உற்சவம்...!
ஶ்ரீவில்லிபுத்தூரில் நடைபெறும் உற்சவங்களிலே தைலகாப்பு உற்சவம் மிகவும் சிறப்பு வாய்ந்தது...!
பாவை நோன்பு நூற்பதற்கு முன்னே நம் தாயார் நம் ஸ்ரீ பெரிய பெருமாளிடம் சென்று நியமனம் பெறுகிறார்.. அதுவே பிரியாவிடை உற்சவம்..
அன்றைய தினத்திலிருந்து பொங்கல் திருநாள் வரை தைலகாப்பு உற்சவம் நடைபெறுகிறது...!
எண்ணெய் காப்பு மண்டபத்தில் எழுந்தருளுகின்ற அரங்கனின் நாயகிக்கு நம் தாயாருக்கு மாகாராணிக்கு
அனைத்து உபச்சாரங்களும் அர்ச்சக பெருமக்களால் செய்யப்படுகிறது..!
தைலகாப்பு முடிந்து பூ சூட்டப்பட்டு
ஶ்ரீ மகாராணியார் காட்சியளிக்கிறார்..
அதன் பின் திருமஞ்சனம் கண்டருளி வீதி உலா வந்து திருக்கோவில் வந்தடைகிறார் நம் தாயார்.....🙏 🙏
மார்கழி முடிந்தும் எதற்காக தை முதல் நாள் எண்ணெய்காப்பு உத்ஸவம்?
ஒரு முறை ஸ்வாமி மணவாளமாமுனிகள் எண்ணெய் காப்பு உத்ஸவத்தை காண வரும் முன்னரே உத்ஸவம் முடிந்துவிடுகிறது..
இன்னும் ஒரு வருடம் காத்திருக்க வேண்டுமே என மிகவும் கவலை கொண்டாராம்..அவரது கவலையை போக்கவே ஸ்ரீ தாயார் தை முதல் நாளன்று எண்ணெய் காப்பு உத்ஸவமும், சவுரி திருமஞ்சனமும் கண்டருளுகிறாள்.
!
பக்தனுக்காக இறைவன் வருவாரா? என்ற கேள்விகளுக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் தாயாரே பதிலாய் இருக்கிறாள்..!
கவிச்சக்ரவர்த்தி கம்பர் ஒரு முறை ‘மார்கழி நீராடல்’ உற்சவத்தைக் காண ஸ்ரீவில்லிப்புத்தூருக்குக் கிளம்பினார்.
ஆனால், குறித்த நேரத்துக்குள் அவரால் திருமுக்குளத்துக்கு வந்து சேர இயலவில்லை.
‘நீராடல் வைபவத்தை தரிசிக்க முடியாதோ’ என்ற ஆதங்கத்துடன் உற்சவ மண்டபத்துக்கு வந்து சேர்ந்த கம்பருக்கு ஆச்சரியம் காத்திருந்தது.
அதுவரை விழா ஆரம்பமாகவில்லை.
காரணத்தை கம்பர் கேட்டபோது, ‘‘எண்ணெய்க் காப்பு நீராடல் முடிந்ததும், ஸ்ரீஆண்டாளுக்கு வைர மூக்குத்தி சேவை நடைபெறும். அந்த மூக்குத்தியைக் காணோம்’’ என்று பதில் அளித்தனர் விழாக் குழுவினர்..!
உடனே, கம்பர் தன் கையிலிருந்து மூக்குத்தி ஒன்றை எடுத்து அவர்களிடம் காட்டி, ‘‘இதுவா பாருங்கள்?’’ என்றார்.
எல்லோருக்கும் ஆச்சரியம். ‘ஸ்ரீஆண்டாளின் வைர மூக்குத்தி கம்பரிடம் எப்படி வந்தது?’ எனக் கேட்டனர்.
கம்பர், ‘‘திருமுக்குளம் கரை ஏறியபோது ஏதோ ஒன்று மின்னியதைக் கண்டு எடுத்து வந்தேன்!’’ என்றார்.
நீராடல் வைபவத்தைக் கம்பர் காண வேண்டும் என்பதற்காகவே ஸ்ரீஆண்டாள் நடத்திய திருவிளையாடலே இது என்பதை சொல்லவும் வேண்டுமோ?!
இப்படிபட்ட இந்த அழகிய உத்ஸவத்தை ஸ்ரீவில்லிபுத்தூரில் மட்டுமே காண இயலும்.. பேசும் தெய்வம்ஸ்ரீ ஆண்டாள்
ஸ்ரீ பெரிய பெருமாள் திருவடிகளே சரணம் 🙏
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம் 🙏
#பக்தியுடன்
ஜெயந்தி சதீஷ்
ஸ்ரீவி.,
Comments