ஊட்டி மலை ரயிலில் உற்சாக பயணம் செய்த சுற்றுலா பயணிகள்

 

ஊட்டி மலை ரயிலில் உற்சாக பயணம் செய்த சுற்றுலா பயணிகள்


கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் ருந்து தினசரி உதகைக்கு நீலகிரி மலைரயில் யக்கப்பட்டு வருகிறது. நூற்றாண்டை கடந்து அதன் பழமை மாறாமல் யக்கப்பட்டு வரும் உலக பாரம்பரிய சின்னமாக விளங்குகிறது. ந்த மலைரயிலில் பயணித்து நீலகிரி மலையின் யற்கை எழிலை கண்டு ரசிக்க உள்நாடு மட்டுமின்று பல்வேறு வெளிநாடுகளில் ருந்தும் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.

இந்நிலையில் கொரோனா பொது முடக்கம் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் முதல் மலைரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைய துவங்கிய காலகட்டத்தில் சில தளர்வுகளை அறிவித்து நாடு முழுவதும் சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. இருந்த போதிலும் மலைரயில் சேவை மட்டும் துவக்கப்படாதது சுற்றுலா பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

2021ஆம் ஆண்டின் புத்தாண்டு தினத்தில் சுற்றுலா பயணிகள் கொண்டாடும் விதமாக மலைரயில் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. இதனால் மகிழ்ச்சியடைந்த சுற்றுலா பயணிகள் புத்தாண்டு தினத்தில் நூற்றாண்டு பழமைவாய்ந்த மலைரயிலில் பயணிக்க பெரிதும் ஆர்வம் காட்டினர்.

இதனால் புத்தாண்டு தின டிக்கெட்டுக்கள் ஒரு சிலமணி நேரத்தில் விற்று தீர்ந்தன. காலை 7.10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்படும் மலைரயிலில் பயணிக்க அதிகாலையிலேயே ரயில்நிலையத்தில் குவிந்த பயணிகள் அங்கிருந்த மலைரயில் அருங்காட்சியத்தை ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். அதன் பின்னர் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறியபடி புத்தாண்டு தினத்தை உலக புகழ் பெற்ற மலைரயிலில் கொண்டாடுவது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்து உற்சாகமாக உதகை நோக்கி புறப்பட்டனர்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி