உணவு நல்லமுறையில் ஜீரணமாக நாம் கடைப்பிடிக்க வேண்டிய மூன்று வழிகள்.
உணவு நல்லமுறையில் ஜீரணமாக நாம் கடைப்பிடிக்க வேண்டிய மூன்று வழிகள்.
நாம் உண்ணும் உணவு ஜீரணமாக கண்டிப்பாக மூன்று வழிகளை பின்பற்ற வேண்டும் என்று டாக்டர்கள் சொல்கிறார்கள். உணவை நாம் எப்படி சாப்பிட்டால் அதிலுள்ள அனைத்து பொருட்களும் ரத்தத்தில் கலக்கும் என்பதற்கு இந்த மூன்று வழிகளும் முக்கியமானவை. அவை பசி, எச்சில் மற்றும் உணவில் கவனம் போன்றவைதான்.
பசிதான் நம் உடம்பில் உள்ள அனைத்து உறுப்புகளையும் தயார் செய்யும் அம்சம். இந்த பசிதான் நாம் உண்ணும் உணவை நல்லபடியாக ஜீரணமாக்கி ரத்தத்தில் கலக்கச் செய்ய தயார் என்று கூறுகிறது. பசி இல்லாமல் சாப்பிடுகிற ஒவ்வொரு உணவும் கழிவாக மாறுகிறது. சில சமயம் அதுவே விஷமாகவும் மாறுகிறது. நல்ல ஜீரணத்திற்கான முதல் வழி பசித்தால் மட்டுமே சாப்பிடுவது.
2-வது வழி உமிழ்நீர்.. நாம் சாப்பிடும் உணவில் உமிழ்நீர் சேரவேண்டும். உமிழ்நீர் கலக்காத உணவு கெட்ட ரத்தமாகிறது. உமிழ்நீரில் நிறைய நொதிகள் உள்ளன. உணவில் உள்ள மூலக்கூறுகளை பிரிப்பதற்கு இவை மிகவும் உதவி செய்கின்றன. எச்சிலால் வாயில் ஜீரணிக்கப்பட்ட உணவை மட்டுமே வயிற்றால் ஜீரணிக்க முடியும்.
உமிழ்நீரால் ஜீரணிக்காத ஒரு உணவு வயிற்றுக்குள் போகும்போது அது கெட்ட உணவாக மாறுகிறது. உணவை மெல்லும் போது உதட்டை மூடி மெல்ல வேண்டும். அப்போதுதான் உமிழ்நீர் நண்றாக உணவில் கலக்கும். வாய்க்குள் நுழைந்த உணவை விழுங்கும் வரை உதட்டை பிரிக்காமல் மெல்லுவதே ஜீரணத்திற்கு நல்லது.
அதற்கடுத்து உணவில் கவனமாக இருக்க வேண்டும். உணவை உண்ணும்போது நமது கவனம், எண்ணம், நான் சாப்பிடுகிறேன் என்று இருந்தால் மட்டுமே ஜீரணம் சம்பந்தப்பட்ட அனைத்து சுரப்பிகளும் நன்றாக சுரக்கும். அதைவிடுத்து கவனத்தை குடும்பம் வியாபாரம், போன்று வேறு ஏதாவது விஷயங்களில் வைத்து சாப்பிட்டால் சிக்கல்கள் உள்ளன. அதாவது, நமது மூளைக்கும், உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும், சுரப்பிகளுக்கும் வேகஸ் என்ற நரம்பு மூலமாக இணைப்பு உள்ளது. நாம் எதை எண்ணுகிறோமோ அது சம்பந்தப்பட்ட சுரப்பிகளை இந்த வேகஸ் நரம்பு சுரக்க வைக்கும். அதனால் சாப்பிடும்போது கவனம் சாப்பாட்டின் மீதுதான் இருக்கவேண்டும். இந்த மூன்றையும் சரியாக கடைபிடித்தால் ஜீரண பிரச்சினை இருக்காது.
Comments