அன்பின் அறம் பவுண்டேஷன் மூலமாக சிறந்த மனிதநேய விருதுகள் வழங்கும் விழா
அன்பின் அறம் பவுண்டேஷன் மூலமாக சிறந்த மனிதநேய விருதுகள் வழங்கும் விழா
சென்னை கொளத்தூர் செந்தில் நகரில் உள்ள ஸ்ரீரங்கா மஹாலில் அன்பின் அறம் பவுண்டேஷன் மூலமாக சிறந்த மனிதநேய விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய 130 க்கும் மேற்பட்டோருக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். சிறப்பு விருந்தினர்களாக ஐஏஎஸ் அதிகாரி ஏ.எஸ். ஜீவரத்தினம், மத்திய சமூக நல வாரிய இணைச் செயலாளர் ஜி.பெருமாள்சாமி, தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர். சரண்யா ஜெய்குமார் மற்றும் எஸ். முருகன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இவ்விழாவினை அன்பின் அறம் பவுண்டேஷன் நிறுவனர் சி. ஜூலி விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றார். மேலும் ஆர்.எஸ். மணிசங்கர் மற்றும் என்.சரவணன் ஆகியோர் இன் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்தனர்.
Comments