ஓடிடி கொண்டாட்டம்
மத்திய அரசு அனுமதி மறுத்துவிட்ட நிலையில், மாநில அரசு, திரையரங்குகளில் நூறு சதவீத இருக்கைகளை நிரப்பிக்கொள்ள அனுமதியளித்த தனது அரசாணையை திரும்பப் பெறுவதைத் தவிர வேறு வழியில்லை என்கிறார்கள்
அப்படி நடந்தால், விஜயின் ‘மாஸ்டர்’, சிம்புவின் ‘ஈஸ்வரன்’ ஆகிய படங்கள் பொங்கல் வெளியீட்டிலிருந்து பின்வாங்கிவிடலாம். ஆனால், வழக்கம்போல ஓடிடி கொண்டாட்டம் பொங்கலுக்கும் களைகட்டிவிட்டது. ஜெயம் ரவியின் ‘பூமி’யும் மாதவனின் ‘மாறா’வும் ஓடிடி வெளியீட்டை உறுதிசெய்து ரசிகர்களை பண்டிகை மனநிலைக்குத் திருப்பியிருக்கின்றன.
Comments