சென்னையில் பெய்து வரும் தொடர் மழை/இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
சென்னையில் பெய்து வரும் தொடர் மழையால் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றனர்.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை மற்றும் புறநகரின் ஒரு சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை முதல் சென்னை மற்றும் செங்கல்பட்டு, திருவள்ளூர் பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களான எழும்பூர், சிந்தாதரிப்பேட்டை, கோடம்பாக்கம், தி.நகர். சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை, கிண்டி, புறநகர் பகுதிகளான பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், ஆலந்தூர், நங்கநல்லூர், மேடவாக்கம், கோவிலம்பாக்கம், வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
தொடர்மழை காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் உள்ள சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். தொடர் மழை காரணமாக பகலிலே முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. தண்ணீர் தேங்கியதால் நகரின் ஒரு சில இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
Comments