ரணமமகரிஷி (47)
ரணமமகரிஷி (47)
பகவான் ஸ்ரீரமணர் குறித்தான தொடர் :47
எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும் தம்முயிர் போல் எண்ணி
ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றவர், அவர் சுத்த சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும் இடமாய் இருப்பது பகவான் ஸ்ரீரமணரின் உள்ளமன்றோ.
பகவான் ஸ்ரீ ரமணர் விருபாட்சி குகையில் தங்கியிருந்த காலம் ஒரு நாள் மாலை வேலையில் திரளாக பக்தர்கள் கூட்டம் தரிசனத்திற்காக வந்திருந்தனர். வந்திருந்தவர்கள் ஒவ்வொருவராக பகவானை தரிசித்துக் கொண்டிருந்தனர். சற்று நேரத்தில் திடீரென மழை பெய்யத் தொடங்கியது. மெதுவாக ஆரம்பித்த மழை தொடர்ந்து கொட்டியது. தரிசிக்க வந்தவர்கள் யாவரும் கீழே இறங்கிச் செல்ல முடியாத நிலை,மாலை கடந்து இரவும் வந்து விட்டது. தன்னை தரிசிக்க வந்தவர் ஒவ்வொருவருக்கும் நல்ல பசியை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்தார் பகவான் ஸ்ரீரமணர். வந்தவர்கள் எல்லாம் மழை இல்லாதிருந்தால் நாம் இந்நேரம் கீழே போய்க் கொண்டிருப்போம். பகவானையே பார்த்துக் கொண்டே
இருக்கும் சந்தர்ப்பம் நமக்கு கிடைத்திருக்காது. பசி என்பது கூட அவர் களுக்கு தெரியாத நிலையில் இருந்தனர்.
பகவான் ஸ்ரீ ரமணர் அங்கிருந்த சீடர் பழனிசாமியிடம் இவர்களின் பசியை போக நம்மிடம் என்ன இருக்கிறதோ அதைக் கொடுங்கள் என்றார் பகவான்.
பழனிச்சாமி ஸ்ரீரமணரின் அருகில் வந்து நம்மிடம் இருக்கும் உணவு கொஞ்சமாகத்தான் நான்கு பேருக்குமான அளவு தான் உள்ளதென சொன்னார்.
அதனையே எல்லாருக்கும் பிரித்துக் கொடு என்றார்.
பழனிசாமி அவர்களுக்கெல்லாம் சிறு சிறு உருண்டையாக உருண்டி அங்கிருந்த 30 பேருக்கும் அளித்தார். அவர்களின் பசி என்பதே எங்கு போனதென்று தெரியவில்லை.
அன்று இரவு ஒன்பது மணிக்கு மேல் மழை விட்டது. அதன் பின்னர் அவர்கள் ஆனந்த புன்னகையுடன் கீழே இறங்கினர்.
கொடுத்தது மிகவும் கொஞ்சமென்றாலும் எப்படித்தான் வயிறு நிறைந்தது என்ற புதிரும் அவர்களுக்குள் இருந்தது.
தனது சீடர் பழனிச்சாமியிடம் பகவான், மழை வந்ததால் இந்த பூமி குளிர்ந்தது இப்போது, வந்திருந்தவர்களின் மனம் என் மேலேயே இருந்தது, நீ கொடுத்த ஒரு உருண்டை உணவு அவர்களின் பசியைப் போக்கியது, உனக்கு இதில் திருப்திதானே என்றார் லேசான புன்னகையுடன்.
எல்லாம் தெரிந்த தங்களுக்கு, இன்றைய நிகழ்வு ஆனந்தம் என்றால் எனக்கும் ஆனந்தம் தான்.
பகவான் ஸ்ரீ ரமணர் பேசாமல் மௌனமாக இருந்தார்
Comments