ஒரே பிரசவத்தில் ‘4 குட்டீஸ்’ மகிழ்ச்சியில் இளம்ஜோடி

 பாலக்காடு அருகே ருசிகரம்; ஒரே பிரசவத்தில் ‘4 குட்டீஸ்’ மகிழ்ச்சியில் இளம்ஜோடி 



பாலக்காடு அருகே இளம் தம்பதி முதல் பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த சம்பவம் அனைவரின் புருவங்களையும் உயர்த்த வைத்துள்ளது. கேரள மாநிலம் பாலக்காடு செர்புளச்சேரி சளவற பகுதியை சேர்ந்தவர் முஹமது முஸ்தபா. இவரது மனைவி முபீனா. இந்த இளம்தம்பதி முதல் பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளனர். பெரிந்தல்மண்ணா மவுலானா  மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவர் டாக்டர் அப்துல் வஹாப் தலைமையிலான டாக்டர் குழு கடந்த 16ம் தேதி அறுவை சிகிச்சை மூலம் 4 குழந்தைகளையும் வெளியே எடுத்தனர். 4ம் ஆண் குழந்தைகள்.


முபீனாவுக்கு கர்ப்பத்தின் தொடக்கத்தில் 4 குழந்தைகள் உருவாகி இருப்பதாக மருத்துவர் ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்த ஜோடி பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு பின்னர், இறுதியில் பெரிந்தல்மண்ணா மவுலானா  மருத்துவமனைக்கு வந்தது. குழந்ைதகள் 1,100 கிராம் முதல் 1,600 கிராம் வரை உள்ளனர். குழந்தைகளுக்கு அயான் ஆதம், ஆஸன் ஆதம், ஐசின் ஆதம் மற்றும் அஸ்வின் ஆதம் என்று பெயரிட விரும்புவதாக முஹமது முஸ்தபா மற்றும் முபீனா தெரிவித்தனர்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி