ஞாயிறு திரை மலர் 31/01/2021

   ஞாயிறு திரை மலர் 31/01/2021















-------------------------------------------------------------------------------------------------------------


கலைவாணருக்கு சிலை வைத்திருக்கிறார்கள், சிவாஜிக்கு ஏன் வைக்கவில்லை என்று ஒரு வாசகர் கேட்ட போது, அவருக்கு ஒரு சிலை வைத்தால் போதாது, ஒன்பது வைக்க வேண்டியிருக்கும் என்று பதில்
அரசு பதில் அன்று குமுதத்தில்
இணையத்தில் இருந்து எடுத்தது

















____________________________________________________________________________________________

அரிய புகைப்படங்கள்
























குஸ்பூவின் சிறுவயதில் நடித்த திரைப்படங்களில் எடுத்த புகைப்படம் இவர் சிறுவயதிலே ஹிந்தி படங்களில் நடித்து இருக்கிறார்

=======================================================














எம்.ஜிஆர் பற்றி நாகேஷ்
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் ஒரு மகத்தான மனிதர். என் மீது எப்போதுமே அவருக்குத் தனி பிரியம் உண்டு. கால்ஷீட் பிரச்னை காரணமாக, எம்.ஜி.ஆர் படங்களில் ஷூட்டிங்குகளுக்கு நான் கால தாமதமாகச் சென்றது உண்டு. அது போன்ற சமயங்களில், என் இக்கட்டைப் புரிந்துகொண்டு, டைரக்டரிடம், 'மற்ற காட்சிகளை எடுத்துக்கொண்டு இருங்கள். நாகேஷ் வந்தவுடன், அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுத்துக் கொள்ளலாம்' என்று சொல்லிவிடுவார். ஆகவே, நான் தாமதமாகப் போனாலும் எம்.ஜி.ஆர் படங்களைப் பொருத்தவரையில் ஷூட்டிங் தடைபடாது.
எம்.ஜி.ஆரின் சிறப்பு அவரது ஈகை குணம் தான். நடிகர் பாலாஜியின் நாடகக் குழுவில் நான் நடித்துக் கொண்டிருந்தபோது ஒருநாள் சேலத்தில் நாடகம் நடைபெற இருந்தது. காரிலேயே சேலம் சென்றோம். உளுந்தூர்பேட்டை தாண்டி ஒரு கிராமத்தின் வழியே போய் கொண்டிருந்தபோது எனக்குத் தாகம் ஏற்பட்டது. ரோடு ஓரத்தில் இருந்த ஒரு குடிசையின் அருகில் காரை நிறுத்தினோம். நான் காரை விட்டு இறங்கியதும் ஒரு வயதான பெண்மணி, என்னிடம், 'என்ன வேணும்?' என்று விசாரித்தார். 'குடிக்கத் தண்ணீர் வேணும்!' என்றதும் குடிசைக்குள் சென்று, பெரிய செம்பில் தண்ணீர் கொண்டுவந்து கொடுத்தார். வெயில் நேரத்தில் ஜில்லென்று உள்ளே இறங்கிய அந்த தண்ணீர் ரொம்ப இதமாக இருந்தது.
நன்றி சொல்லிவிட்டுப் புறப்படுவதற்கு முன், நடிகர் பாலாஜி, தமது பர்ஸிலிருந்து நூறு ருபாய் நோட்டை எடுத்தார். அதை அந்தப் பெண்மணியின் கையில் கொடுத்தார். அதை வாங்கிக்கொண்ட அவர், ஆச்சர்யத்துடன் ருபாய் நோட்டையே சில வினாடிகள் பார்த்துக்கொண்டு இருந்தார். சட்டென்று ருபாய் நோட்டைப் பிடித்தபடி, தமது இரு கைகளையும் தலைக்கு மேலே தூக்கி, பாலாஜியைப் பார்த்து, 'எங்கள் எம்.ஜி.ஆர் வாழ்க!' என்றார். சில நிமிடங்களுக்கு ஒன்றுமே புரியாமல் குழம்பிப் போனோம். அப்பறம் விஷயத்தை நாங்களாகவே புரிந்துகொண்டோம்.
அந்த கிராமத்து மூதாட்டியைப் பொறுத்தவரை, 'எம்.ஜி.ஆர்' என்கிற மனிதர் மட்டும்தான் முன்பின் தெரியாத ஏழை, எளிய மக்களுக்கும் உதவி செய்வார். ஏழை மக்களுக்கு ஒருவர் உதவுகிறார் என்றால் அது நிச்சயமாக எம்.ஜி.ஆரை தவிர வேறு ஒருவராக இருக்கவே முடியாது என்பது, அவரது மனத்தில் பதிந்து விட்டது. இவரைப் போன்ற நம்பிக்கைகொண்டு ஏழை எளியவர்கள், இன்னுமும் நிறையப் பேர் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள்.
எம்.ஜி.ஆரின் தாராளமான உதவும் மனப்பான்மையால், நானும் கூட பயனடைந்திருக்கிறேன். சிவாஜி நடிக்க அவரது ஆடிட்டர்கள் (என்ற நினைவு) 'சித்ரா பௌர்ணமி' என்று ஒரு படம் எடுத்தார்கள். படத்தின் ஷூட்டிங்கை காஷ்மீரில் வைத்துக் கொண்டார்கள். படத்தில் ஒரு ஸ்பெஷல் குதிரை வரும். அதைகூட காஷ்மீருக்கு அழைத்துக்கொண்டு வந்தார்கள்.
காஷ்மீருக்கு ஷூட்டிங்குக்குப் போய் விட்டார்களே ஒழிய, பணத் தட்டுப்பாடு ஏற்பட்டது. சாதாரண ஹோட்டலில்தான் எங்களையெல்லாம் தங்க வைத்தார்கள். கிடைத்ததைச் சாப்பிட்டுக்கொண்டு, அட்ஜஸ்ட் செய்துகொண்டு, ஒத்துழைப்புத் தரும்படி கேட்டுக்கொண்டார்கள் படப் பிடிப்பு வேகமாக நடைபெற முடியாதபடிக்கு இயற்கைகூட சதி செய்தது.
எந்த இடம் என்று முன்கூட்டியே திட்டமிட்டுக்கொண்டு, படப்பிடிப்புக் குழுவினர் போய் இறங்குவார்கள். ஆனால், அங்கே பனி பொழிந்து, போதிய வெளிச்சம் இல்லாமல் படப்பிடிப்புக்குத் தடங்கல் ஏற்படும். இப்படியே நாள்கள் நகர்ந்து கொண்டிருந்தன.
அந்தச் சமயத்தில், வேறு ஒரு தமிழ்ப் படத்தின் ஷூட்டிங்கும் காஷ்மீரில் நடந்தது. படத்தின் ஹீரோ எம்.ஜி.ஆர். எங்கள் படத்தின் நிலைமைக்கு நேர் எதிரான சூழ்நிலை அங்கே நிலவியது. எம்.ஜி.ஆர் படத்தின் ஷூட்டிங் லொகேஷன்களில் எந்த பிரச்சனையும் கிடையாது. மடமடவென்று ஷூட்டிங் நடந்துகொண்டிருந்தது. யூனிட்டில் அனைவருக்கும் வாய்க்கு ருசியாக சாப்பாடு, குளிருக்குப் போட்டுக்கொள்ள, எம்.ஜி.ஆர் தமது சொந்தச் செலவில் எல்லோருக்கும் வாங்கிக் கொடுத்த ஸ்வெட்டர், ஷூ என்று ஒரே அமர்க்களம்தான்!
இந்தத் தகவல்களை எல்லாம் கேள்விப்பட்ட எங்கள் யூனிட் ஆட்கள் விட்ட ஏக்கப் பெருமூச்சில், காஷ்மீர் பனியே கரைந்திருக்கும்.
ஒருநாள் காலை, நான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு ஒரு பெரிய கார் வந்தது. அதிலிருந்து இறங்கியவர் யார் தெரியுமா? சாட்சாத் எம்.ஜி.ஆரே தான். ரிசப்ஷனில் விசாரித்துக்கொண்டு, நேரே என் ரூமுக்கே வந்து விட்டார். எனக்கு இனிய அதிர்ச்சி!
எம்.ஜி.ஆரே 'இங்க நிலைமை கொஞ்சம் சரியில்லைன்னு கேள்விப்பட்டேன். உங்க வேலை முடிந்தவுடன், உடனடியாக ஊருக்குப் புறப்பட்டு விடுங்க! செலவுக்கு இதை வைத்துக் கொள்ளுங்க!' என்று பையிலிருந்து சில ருபாய் நோட்டுக்கட்டுகளை எடுத்து என் கையில் திணித்தார்.
எம்.ஜி.ஆரின் திடீர் வருகையால் ஏற்பட்ட இன்ப அதிர்ச்சியிலிருந்தே மீள முடியாமல் இருந்த எனக்கு அவரது இந்தச் செயல், பேரதிர்ச்சியையும், அதே நேரம் பெரும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.
எம்.ஜி.ஆர் விடைப்பெற்றுக்கொண்டு புறப்பட்டுப் போன பிறகு, அவர் என்னுடைய கைகளில் திணித்த ருபாய் நோட்டுக்களைப் பார்த்தேன். நூறு ரூபாய்க் கட்டுக்கள் மூன்று இருந்தன. அடேயப்பா! முப்பதாயிரம் ருபாய்!
நான், எம்.ஜி.ஆர் சம்பந்தப்படாத ஒரு படத்துக்காக, காஷ்மீருக்குப் போயிருக்கிறேன். என்னைத் தேடி வந்து எனக்குப் பணம் கொடுத்து உதவி செய்ய வேண்டும் என்கிற அவசியம் என்ன அவருக்கு! ஆனாலும், எனக்கு உதவி செய்தார் என்றால், அதற்க்கு அவரது தங்க மனதும் என் மீது அவர்கொண்டிருந்த அன்பும் தானே காரணம்?
திரையுலகிலிருந்து விலகி, எம்.ஜி.ஆர் முதலமைச்சர் ஆன பிறகும்கூட, அவர் என்மீது கொண்டிருந்த அன்பு குறையவில்லை. தி.நகர் பாண்டி பஜாரில் நான் ஒரு சினிமா தியேட்டர் கட்டினேன். அதில் சில பிரச்சனைகள். நாகேஷின் தியேட்டர் பாதியில் நிற்கிறது என்று 'குமுதம்' பத்திரிக்கையில் எழுதியிருந்தார்கள்.
அன்று முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து 'எம்.ஜி.ஆர் என்னைச் சந்திக்க விரும்புகிறார்' என்று தகவல் வந்தது. திடீரென்று எம்.ஜி.ஆர் எதற்கு என்னைச் சந்திக்க விரும்புகிறார் என்று எனக்குப் புரியவில்லை. நேரம் குறிப்பிட்டு, தோட்டத்துக்கு வரச் சொன்னார்கள். தோட்டத்துக்குப் போய் எம்.ஜி.ஆரைப் பார்த்தவுடன், பொதுவான நலன் விசாரித்து விட்டு, 'என்ன நீ! பள்ளிக்கூடத்துக்கு எதிரில் சினிமா தியேட்டர் கட்டிக்கொண்டிருக்கிறாய்? அதற்க்கு ஆட்சேபனை எழுப்பி, புகார்கள் வருகின்றன!' என்றார்.
'நான் தியேட்டர் கட்டிக்கொண்டிருப்பது வாஸ்தவம்தான். அதனால் உங்களுக்கு ஏதாவது ஆட்சேபம் என்றால் சொல்லுங்கள். தியேட்டரை இடித்து விடுகிறேன்!' என்றேன்.
இப்படிப்பட்ட ஒரு பதிலை அவர் எதிர்பார்க்கவில்லை போலும்!
'அப்படியெல்லாம் அவசரப்பட்டுப் பண்ணாதே! ஸ்கூலுக்கு எதிரில் சினிமா தியேட்டர் என்பதால் தான் ஆட்சேபனை...' என்று அவர் சொல்லவும், 'சார்! உங்களுக்கு தெரியாத ஒரு விஷயத்தை நான் ஒன்னும் புதுசா சொல்லிடப் போறதில்லை! ஆனாலும், என் மனசில் பட்டதைச் சொல்கிறேன்' என்று சொல்லி விட்டு, 'பள்ளிக்கூடத்துப் பசங்க, ஸ்கூலைக் கட் பண்ணிட்டு, சினிமாவுக்குப் போகணும்னு நினைச்சா, ஸ்கூலுக்கு நேர் எதிரில் இருக்கிற தியேட்டருக்குப் போவாங்களா?' என்றேன் சற்று மெலிதான குரலில்.
'அப்படீன்னு சொல்லுறியா நீ?' என்று கேட்டு விட்டு, சில நிமிடங்கள் அமைதியாக இருந்தார்.
பிறகு, 'சரி! நீ போகலாம்! நான் இந்த விஷயத்தைப் பார்த்துக்குறேன்!' என்றார். நான் விடைபெற்றுக்கொண்டேன்.
இரண்டு வாரம் கழித்து, நாகேஷ் தியேட்டருக்கான அரசாங்க லைசன்ஸ் வந்தது.
எம்.ஜி.ஆர் என்னைப் பொருத்தவரை இன்னொரு யுக்தியை ஷூட்டிங்கின்போது கடைப்பிடிப்பார். நேரத்துக்குப் போனாலும் சரி, தாமதமாகப் போனாலும் சரி, செட்டுக்குள் போனவுடன், 'வாங்க! என் பேர் எம்.ஜி.ராமச்சந்திரன்' என்று சிரித்தபடியே அறிமுகப்படுத்திக்கொள்வார். நான் சும்மா இருப்பேனா? பதிலுக்கு 'நான் செய்யூர் கிருஷ்ணாராவ் நாகேஸ்வரன்' என்று அறிமுகம் செய்துகொள்வேன். எம்.ஜி.ஆரே முதலில் கையை நீட்ட நானும் கை குலுக்குவேன்.
அடுத்து, 'ஒரு பதினைந்து நிமிஷம் எடுத்துக்கலாம். மேக்கப் ரூமுக்குப் போய் டச் அப் பண்ணிட்டு, ஏதாவது டெலிபோன் பண்ணனும்னா, அதையும் முடிச்சிட்டு வந்துடு. ஷூட்டிங் ஆரம்பிச்சதும் வேற எந்தத் தொந்தரவும் இருக்கக் கூடாது' என்பார்.
இதை மேலோட்டமாகப் பார்க்கிறபோது எம்.ஜி.ஆருக்கு ஷூட்டிங்கில் வேறு எந்தத் தடங்கலும் தாமதமும் இருக்கக்கூடாது என்பதுதான் வெளிப்படும்.ஆனால், அதற்க்கு ஓர் உள்அர்த்தம் உண்டு. மேக்கப் ரூமுக்குப் போய், டெலிபோன் என்பதெல்லாம் சும்மா ஒரு சம்பிரதாயம். எம்.ஜி.ஆருக்குத் தம் எதிரில் யாரும் சிகரெட் பிடித்தால் பிடிக்காது. சில சமயம் கோபப்படுவார். நானோ நிறைய சிகரெட் பிடிக்கிறவன். எனவே என்னால் அனாவசியமாக எந்தப் பிரச்சனையும் வந்து விடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கையாக இந்த டெக்னிக்கைக் கையாள்வது அவரது ஸ்டைல்.
இணையத்தில் இருந்து எடுத்தது

/////////////////////////////////////////////////////////////////////////////////

இந்தியனை அடிக்கிறது ஒரு வெள்ளைக்கார பொம்மையா இருந்தாலும் அதை என்னால பார்த்திட்டு என்னால சும்மா இருக்க முடியாது…” – சேனாபதி












இதைவிட ஒரு சுதந்திர போராட்ட வீரனின் தேசபக்தியை வசனத்தில் எப்படி கொண்டு வர முடியும். அதுதான் சுஜாதா.
எழுத்தாளர், வசன கர்த்தா , விஞ்ஞானி என பல முகங்கள் சுஜாதாவுக்கு உண்டு. ரங்கராஜன் என்ற இயற்பெயர் கொண்ட எழுத்தாளர் சுஜாதாவின் முதல் கதை 1953 ஆம் ஆண்டு சிவாஜி என்ற பத்திரிக்கையில் வெளிவந்தது. அதன் பிரதி கிடைக்காமல் வெகுகாலம் தேடியலைந்து அலுத்துப்போன பின்னர்,”அதனை கண்டுபிடித்து தருபவருக்கு என் ராஜ்யத்தில் ஒரு பகுதியையும், என் மகளையும் மணமுடித்து தருகிறேன் ”என சுஜாதா ஒருமுறை வேடிக்கையாக குறிப்பிட்டிருந்தார்.
இணையத்தில் இருந்து எடுத்தது


++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++















அப்பாவின் நாற்காலி.
எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் கவிஞர் இந்த நாற்காலியைத்தான் பயன்படுத்தினார். ஒரு வேளை அதில் பலமணிநேரம் அமர்ந்திருப்பது சுகம் என நினைத்தாரோ!
அர்த்தமுள்ள இந்து மதம் உட்பட நூற்றுக்கணக்கான திரைஇசைப் பாடல்கள் , கவிதைகள் , கட்டுரைகள் இதில் அமர்ந்துதான் கவியரசரால் சொல்லப்பெற்றன.
அண்ணன் ராம. கண்ணப்பன் அவர்கள் தரையில் அமர்ந்து அப்பா சொல்வதை எழுதுவார்கள்.
இந்த நாற்காலி 1981 அக்டோபர் முதல் என்னிடம் பாதுகாப்பாக உள்ளது.
எனது அலுவலக இருக்கை அருகே உள்ளது. அப்பா என்னுடன் இருப்பது போன்ற உணர்வு. தினமும் இந்த நாற்காலியை தொட்டு வணங்காமல் அலுவல்களை தொடங்குவதில்லை.
காந்தி கண்ணதாசன்

===========================================================













ளையராஜா இசையமைத்த என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம் (வள்ளி), காற்றில் எந்தன் கீதம் (ஜானி) போன்ற பாடல்களைக் கேட்கும்போதெல்லாம் இதயத்தை யாரோ பறித்தெடுத்துச் செல்வது போன்ற உணர்வுநிலைக்குத் தள்ளப்படுவேன்

. இந்த இரண்டு பாடல்களும் கீரவாணி ராகத்தால் மிக நுண்மையாக படைத்தப்பாடல்கள்

 இந்த ராகம் பறவைகளுக்குப் பிடித்தமான ராகம் என்று சங்கீத நூல்கள் குறிப்பிடுகின்றன என கேள்விப்பட்டிருக்கிறேன்

நம்  பயணத்தின்போது என்னுள்ளே என்னுள்ளே பாடல், ஒரு மரத்தில் பறவைகள் பறந்து எழுந்து மீண்டும் அமர்வது போன்ற உணர்வை  தரும்

 . பாடலுடன் பாடலின் நிரவல் இசைக்கோவையும் ஒன்றிணைந்து ஒரு காட்சிப் படிமமாகி, கவித்துவமான நுண் ஒலியால் நிரம்பியதே இளையராஜாவின் தனித்துவமான உலகம்.

வள்ளி திரைப்படத்திற்காக வாலி எழுதிய வரிகளுக்கு இசை அமைத்தவர்  இளையராஜா. பாடியவர் ஸ்வர்ணலதா, இந்த பாடலை நான் கேட்கும் போதெல்லாம் ஏனோ என் நினைவுகள் மறைந்து போன பாடகி ஸ்வர்ணலதாவையே சுற்றி வருகின்றது!

                     இளையராஜாவின் கிட்டார் இசை, நரம்புகளுக்குள் ஏதோ செய்கின்றது, விபரிக்கமுடியாத ஏதோ உள்ளு ணர்வு வருடுவதுபோல ஒர் இசைத்தவிப்பு பாடலை நீங்களும் கேளுங்கள் அதை ஒத்துக்கொள்வீர்கள்!

கண்ணிரெண்டில் நூறு வெண்ணிலாக்கள் தோன்றும்  வாலியின்வரிகள் மிக அழகானவை

பொதுவாக நான் திரைப்பாடல்களின் காட்சிகளை பார்ப்பதைவிட கேட்பதில்தான் ஆர்வம்

 என் மனம் கவர் பாடல்களாய் இருப்பின் அதன் திரைக் காட்சிப்பாடுகளைக் காண்பதை தவிர்ப்பேன்


பல நிகழ்வுகளில்  நம் மனம் கவர்ந்த பாடல்கள் நம் கற்பனையில் சில காட்சிகளை காண்பிக்கும

அது விவரிக்க முடியாத ஒரு மன நிலை


என்னுள்ளே என்னுள்ளே... பாடலின் இசை நிச்சயமாக ஆன்மிகத் தன்மை கொண்டது போல தோன்றுகிறது

 இசைஞானியின் பல பாடல்கள் அப்படித்தான். திரைக் கதையின்படி இது காம நிகழ்வொன்றில் இடம் பெறுவதாய் இருக்கிறது

 சங்க இலக்கியத்தில் ஓர் அருமையான பாடல் இருக்கிறது யாரும் இல்லை தானே கள்வன் என்று. அச்செய்யுளின் அடிகளை ஆழ்ந்து நோக்கினால்

 அதில் ஒரு பெண்ணின் அக ஆழத்தில் கேவித் தவிக்கும் ஆன்மாவின் குரலினைக் கேட்கலாம். இப்பாடலின் இசை அந்தச் சங்கப் பாடலுக்கு இசைஞானி இயற்றியிருக்கும் பொழிப்புரை என்று கருதலாம்

வாலி எழுதியிருக்கும் வரிகளிலும்கூட சிற்றின்பமானது பேரின்ப மொழியில்தான் பேசுகிறது. காலம் என்னும் தேரே ஓடிடாமல் நில்லு என்னும் ஒரு வரி போதுமானது. வரியாகப் பார்க்கும்போது அது காலத்திற்கு இடும் ஆணை போல் தொனிக்கும்

 இசைஞானியின் மெட்டு அதனை ஓர் பிரார்த்தனை போல் நமக்கு சொல்லாமல் சொல்லும்

இங்கே ஸ்வர்ணலதாவின் குரல் மிகச் சரியான தேர்வு. அப்பாடகிக்கு அவர் அளித்த இசை தீட்சை இந்தப்பாடல்

 இந்தப்பாடலின்திரைக்காட்சி சரியாக கையாளவில்லை நமக்கு ஏமாற்றத்தைத்தான் தருகிறது

நல்லவேளை பாடல் காட்சி கிடைக்கல

உங்க கற்பனையில் நீங்களே காட்சிகளை படைத்துக்கொள்ளுங்கள்


இசைஞானியின் பல பாடல்கள் இப்படிதான்

 அப்பாடலில் தொனிக்கும் ஆன்மிக உணர்வை சிலரே உணர்ந்துள்ளனர்

இந்தப்பாடலில் மேற்கத்திய இசை வடிவமான சிம்ஃபொனியின் கூறுகள் எப்படிக் கையாளப் பட்டுள்ளன என்பதை அறிய நமக்கு போதிய  மேதாவித்தானம் எனக்கு  இல்லை ‘


இளையராஜாவுடன் பணியாற்றிய அனைத்துப் பாடல்களிலும் தனக்கென ஒரு தனித்தன்மையைப் பிரதிபலிக்க ஸ்வர்ணலதா  ஒரு போதும் தவறியதில்லை. இளையராஜா இசையில் இவர் பாடிய ``மாலையில் யாரோதான் அவருக்கு மிகப்பெரும் அங்கீகாரத்தைப் பெற்றுக் கொடுத்தது. இன்றளவும் அப்பாடலில் உருகும் தேனென அவரின் குரல் அத்தனை மென்மையாய் ஒலித்துக்கொண்டேதான்

ஸ்வர்ணலதாவின் குரல், அது வலிகளின் அடையாளம்; மோகத்தின் வடிவம்..!

 முகம் காணாத நேசம் என்பார்களே அதைப் போன்றதோர் உணர்வை எட்டியிருந்த காலத்தில் அவரின் பல பாடல்கள் முணுமுணுப்பைத் தாண்டி ரசனையின் அடுத்தகட்டத்துக்கென என்னை அழைத்துச் சென்றிருந்தது.

அக்கால கட்டத்தில் அவர் பாடிய பல பாடல்களைக்க  கேட்ட இரண்டொரு நொடிகளில் இது ஸ்வர்ணலதாவின் குரலென அடையாளம் காண முடிந்திருந்தது

அவரின் தாய் மொழி தமிழில்லை என்று தெரிய வாய்ப்பே இல்லை. உச்சரிப்புக்கெனத் தனி அகராதி ஏதும் உண்டெனில் அதில் ஸ்வர்ணலதாவுக்கும் ஓர் இடமிருக்கும். அப்படியொரு தெளிவான உச்சரிப்பை இந்த இன்னிசைக் குயிலுக்கு எவர் கற்றுக்கொடுத்திருப்பார் என்று யோசித்ததுண்டு.

உச்சரிப்பை எத்தனை முறை ரசித்தாலும் தகும்.  `கேப்டன் பிரபாகரன் படத்தில் வந்த ``ஆட்டமா தேரோட்டமா பாடல்தான் ஸ்வரண்லதாவுக்குக் கிடைத்த முற்றிலும் மாறுபட்ட பாடல். அதற்கு முன் பாடிய எல்லாப் பாடல்களும் மெலடி வகையறாக்கள். ஆனால் இப்பாடல் அவரின் குரலின் மாறுபட்ட பரிமாணம். பாடல் முழுவதும் அவர் குரலின் வழி பரவும் குதூகலம் நம்மையும் ஒட்டிக் கொள்ளும். 

 

என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம் 
எங்கேங்கோ எங்கேங்கோ என் எண்ணம் போகும் தூரம் 

என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம் 
எங்கேங்கோ எங்கேங்கோ என் எண்ணம் போகும் தூரம் 
நான் மெய் மறந்து மாற ஓர் வார்தை இல்லை கூற 
எதுவோ மோகம்..................

என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம் 
எங்கேங்கோ எங்கேங்கோ என் எண்ணம் போகும் தூரம் 

கண்ணிரெண்டில் நூறு வெண்ணிலாக்கள் தோன்றும் 
ஆனாலும் அனல் பாயும் 
நாடி எங்கும் ஏதோ நாத வெள்ளம் ஓடும் 
ஆனாலும் என்ன தாகம் 
மெய் சிலிர்க்கும் வண்ணம் தீ வளர்த்ததென்ன 
தூபம் போடும் நேரம் தூண்டிலிடதென்ன 
என்னையே கேட்டு ஏங்கினேன் நான்
என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம் 
எங்கேங்கோ எங்கேங்கோ என் எண்ணம் போகும் தூரம் 

கூடு விட்டு கூடு ஜீவன் பாயும் போது 
ஒன்றி ஒன்றாய் கலந்தாட 
ஊண் கலந்து ஊனும் ஒன்று பட தியானம் 
ஆழ்நிலையில் அறங்கேற
காலம் என்ற தேரே ஆடிடாமல் நில்லு 
இக்கணத்தை போலே இன்பம் எது சொல்லு 
காண்பவை யாவும் சொர்க்கமே தான்

என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம் 
எங்கேங்கோ எங்கேங்கோ என் எண்ணம் போகும் தூரம் 
நான் மெய் மறந்து மாற ஓர் வார்தை இல்லை கூற 
எதுவோ மோகம்..................

என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம் 
எங்கேங்கோ எங்கேங்கோ என் எண்ணம் போகும் தூரம் 

என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம் 
எங்கேங்கோ எங்கேங்கோ என் எண்ணம் போகும் தூரம்

இளையராஜாவின் இசையில் பல பாடல்கள் பாடியிருந்தாலும் ``என்னுள்ளே என்னுள்ளேபாடல் இன்றளவும் அவருக்கு ஒரு சிகரம்தான்  மோகத்துக்கென ஒரு வடிவமிருக்குமெனில் அது ஸ்வர்ணலதாவின் குரலாகத்தான் இருக்கும். ``மெய் சிலிர்க்கும் வண்ணம் தீ வளர்த்ததென்ன என்று அவர் உச்சஸ்தாயில் பாடும் அக்குரலைக் கேட்கையில் கால்கள் இரண்டும் தரையில் இல்லாது மிதந்துகொண்டிருக்கும். இப்போதிருக்கும் தலைமுறைப் பாடகர்கள் கூட அப்பாடலை வெவ்வேறு விதமாக பாட முயற்சி செய்தாலும் ஸ்வர்ணலதாவின் குரலில் வெளிப்படும் மோகத்தின் சிறு அளவைக் கூட யாராலும் நெருங்க முடியவதில்லை என்பது நிஜம்

 

.

 

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி