WhatsApp மூலம் இனி ஈஸியா ஷாப்பிங்



 

WhatsApp மூலம் இனி ஈஸியா ஷாப்பிங் செய்யலாம்.. புதிய 'கார்ட்' (Cart) அம்சம் அறிமுகம்.

WhatsApp நிறுவனம் சமீபத்தில் பல புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வரிசையில் தற்பொழுது வாட்ஸ்அப் நிறுவனம் அதன் வாட்ஸ்அப் பிசினெஸ் பயன்பாட்டில் ஷாப்பிங் செய்வதற்காக கார்ட் (Cart) என்ற புதிய அம்சத்தை தற்போது அறிமுகம் செய்துள்ளது. 

ஈஸியா ஷாப்பிங் செய்ய புதிய அம்சம்

வாட்ஸ்அப் பிசினெஸ் பயனர்களுக்கு, வாட்ஸ்அப் நிறுவனம் தற்பொழுது மற்றொரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்துகிறது. இந்த அம்சம் வாட்ஸ்அப் மூலம் ஷாப்பிங் செய்யும் அனுபவத்தை மேலும் எளிமையாக்குகிறது. சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு, வாட்ஸ்அப் பிசினஸ் கணக்குடன் சாட்டிங் அம்சத்துடன் ஷாப்பிங் பட்டனை நிறுவனம் அறிமுகப்படுத்தியது.

கார்ட்' பட்டன் அப்டேட்

இந்த ஷாப்பிங் அம்சம், வாட்ஸ்அப் பிசினஸ் பயன்படுத்தும் வணிகர்களிடம் இருக்கும் தயாரிப்புகளின் பட்டியலைக் பயனர்களுக்குத் தெளிவாகக் காட்டும். சமீபத்திய அப்டேட்டில், வாட்ஸ்அப் நிறுவனம் புதிதாக ஒரு 'கார்ட்' பட்டனை ஷாப்பிங் பிரிவில் சேர்த்துள்ளது



Add to Cart என்ற ஐகான் இது பயனரைத் தனது கார்ட் வண்டியில் பல தயாரிப்புகளைச் சேர்க்கவும், அந்த பொருட்களுக்கான ஆர்டர் செய்யவும் நேரடியாக வாட்ஸ்அப் மூலம் வணிகருடன் இணைக்கவும் அனுமதிக்கிறது. வாட்ஸ்அப் பயனர்கள் ஷாப்பிங் செய்வதற்குத் தயாரிப்புகளின் பட்டியலை சர்ப் செய்து, ​​அவர்களுக்குப் பிடித்த தயாரிப்புகளை Add to Cart என்ற ஐகானை கிளிக் செய்து கார்டில் ஆட் செய்து, ஆர்டர் செய்துகொள்ளலா


பிரத்தியேக Add to Cart பட்டனை நிறுவனம் இப்போதைய அப்டேட்டில் சேர்த்துள்ளது. மேலும் ஒரு 'கார்ட்' வடிவ ஐகானையும் நிறுவனம் தயாரிப்புகளுக்கு அருகில் காண்பிக்கிறது. இந்த புதிய கார்ட் அம்சம், ஷாப்பிங் செய்யும் நுகர்வோருக்கு மட்டுமல்லாமல், கார்டின் செயல்பாடு விற்பனையாளர்களுக்கும் பயனுள்ளதாய் அமைத்துள்ளது.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி