ரமணமகரிஷி (13)

ரமணமகரிஷி (13)  

பகவான் ஸ்ரீ ரமணர் குறித்தான தொடர் :  

பகுதி 13





 பகவான் ஸ்ரீ ரமணரின் பார்வை வேறானது. அவரைப் பொறுத்தவரை துறவு என்பது வீட்டையும் சொத்துக்களையும் துறப்பது மட்டுமல்ல

 விருப்பங்களையும் உணர்வுகளையும் துறப்பதுவாகும். துறந்தவன் உலகத்தோடு ஐக்கியப்படுகிறான்.  அவருடைய பார்வை விசாலமானது. இந்த உலகம் முழுவதுமே தழுவிக்கொள்ளும் பேரன்பு அவருள்  பெருகிவிடுகிறது. ஆக துறவு என்பது தெளிவு.


 மனதுக்குள் கட்டுப்பட்டு வாழ்வது, மனதால் உருவாகும் செயலின் குணம்  மேன்மை பெறுவது. அடுத்தவர் நலனில் பெருமை சேர்ப்பதுமாகும். எண்ணங்களை நல்வழிப்படுத்தி, ஒரு புன்னகையினால் கிரகிக்கப்பட்டு பக்குவ நிலை அடைவது. மனதில் இருக்கும் கவலையை முடிவுக்குக் கொண்டு வருவது.


 ஒரு முறை, பகவான் ஸ்ரீ ரமணர், தம்முடைய சீடர்களிடம் ஆசிரமத்தில்  புன்னகைத்துக் கொண்டிருந்தார். அவ்வமயம் அருகில் இருந்தவர்கள்  அவரது விழிகளின் பிரகாசமுடனான  ஒளியைக் கண்டு புளகாங்கிதம்  அடைந்தனர். அங்கு வந்த மக்களும் அந்த ஆனந்த திருக்காட்சியைக் கண்டு மகிழ்ந்தனர்.


 அவ்வமயம், நடுத்தர வயது கொண்ட ஒருவர், மனது முழுக்க கவலை வைத்துக்கொண்டு அழுதுகொண்டே பகவானை  சந்தித்தார்.  பகவான் ரமணரின் ஆனந்த தரிசனத்தில் மூழ்காமல் தன்னுடைய கவலைகளை அழுது கொண்டே தெரிவித்தார். அவன்  கவலைகளை சொல்லச் சொல்ல கேட்டுக்கொண்டிருந்தார் பகவான் ஸ்ரீ ரமணர்


 ஒரு சீடன்  பகவான் ஸ்ரீ ரமணரின் புன்னகைத்த அந்த திருக்காட்சி யும் பார்த்து. அழுதுகொண்டே கவலை சொல்லும்  மனிதரைப் பார்த்துச்  சொன்னான். பகவானே நிலைமையை புரியாமல், கங்கைக் கரையோரம்  நின்று ஒருவர் தாகத்திற்கு தண்ணீர் கேட்பது போல என்றான்.


 இன்னொரு சீடனோ,  கங்கையில் கழுத்தளவு தண்ணீரில் நின்று கொண்டு தாகம் தீர அழுது கொண்டிருப்பது  போல என்றான்.


இந்த இரண்டையும் உள்வாங்கிய பகவான் ஸ்ரீ ரமணர், கங்கையே  தாகத்தில் அழுகிறது போல உள்ளது என்றார்.


 வாழ்க்கை என்பதில் இன்பமும்  துன்பமும் மாறி மாறி வரும். இருள் எப்போது வருகிறது,  அதற்கென ஒரு காலம்,  பின்னர் ஒளி வந்த பின்னர் இருள் கொஞ்சம் கொஞ்சமாய் விலகி பகலும் வரும் . இன்பத்தில் இருக்கும் பொழுது எவ்வளவு மகிழ்கிறாயோ,  அதைப்போல துன்பம் வரும் போது அந்த  கவலையை தாங்கிக் கொள்ளத் தான் வேண்டும். ஆனால் அதுவும் கடந்து போகும்.ஒரு தெளிவு வரும்  நல்லதொரு தீர்வை நாம் அடையும் வரை பொறுமையை கையாள்வது  மிக முக்கியம்.


 கவலையோடு கண்ணீரோடு வந்தவன் எழுந்து செல்லும்  போது வாழ்வியலின் நிதர்சன உண்மையை உணர்ந்தான். பகவான் ஸ்ரீ ரமணரின் அருளுரை தந்தது அவனுக்கு புதிய வாழ்வு.


 ஆன்மீக அடிப்படை எப்போது ஒரே மாதிரி தான். ஆனால் காலத்திற்கேற்ப வழியை மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கிறது.மெய்ப்பொருள் அறிய விரும்பும் ஒருவர் நகரத்திலுள்ள தன்னுடைய வீட்டினையோ, பதவியினையோ துறக்க வேண்டியதில்லை  அவன் மருத்துவராக இருக்கலாம், பொறியியல் நிபுணராக இருக்கலாம், வழக்கறிஞராக இருக்கலாம் ஆனால் அவனுக்குள்  இருக்கும்  ஆன்மீக நாட்டம் அத்தனையும் அதிகமாய்  நிற்கிற சாத்தியம் முழு அளவில் தேவை.


 தண்ணீர் மட்டம் எத்தனை உயர்ந்தாலும் தாமரைப்பூ அதற்கும் மேலாய் தலை நீட்டுகிறது அப்படித்தான்.


 பகவானின் போக்கை புரிந்து கொள்வதும் அத்துடன் அனுசரித்துப் போவதும்  பகவானின் தாய்க்கு கடுமையான பயிற்சியாக இருந்தது, பெரும்பாலும் அவர் தன்னைப் பெற்றவளைக்  கண்டுகொள்வதே இல்லை.


சமயத்தில் எது கேட்டாலும் பதில் சொல்லாமலே இருந்து விடுவதும் உண்டு.அது பற்றி தாயார் குறைபட்டுக் கொள்ளும் போதெல்லாம் நீ மட்டுமா, எல்லோருமே என்னுடையது தாய் தான் என்றார்  பகவான் ஸ்ரீ ரமணர்.


 இவ்வாறு பகவான் சொல்லிவிட்ட பிறகு, தாய் அழகம்மாளுக்கு,  மகன் சொன்ன கருத்தை ஒன்றுக்குப் பல முறை யோசித்தார்.  எனக்கு மட்டும் பிள்ளை என்று நினைத்தேன் உன்னை, ஆனால் நீயோ  எல்லோருக்கும் பிள்ளையென சொன்னபோது,  சுயநலமாய் தனக்குள் இருந்த அகந்தை அற்றுப் போனது, தாய் அழகம்மாளுக்கு நல்லதொரு தெளிவும் கிடைத்தது. தொண்டரோடு தொண்டராய் சேவை செய்யவே மனம்  இருந்தது. 



முருக.சண்முகம்

Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி