நான் பிச்சைக்காரன்.

 

நான் பிச்சைக்காரன்..

. என்னிடம் ஏதுமில்லை

; என் பெயரைச் சொன்னால் ஓடிவருவேன்!’

 - பகவான் யோகி ராம்சுரத்குமார் 102வது ஜெயந்தித் திருநாள்- 01-12-2020

 


  

நான் மிகச் சாதாரணமானவன். கடவுளாகிய நமது தந்தை எனது பெயரை அழைத்தால் உங்களுக்கு நிச்சயம் உதவுவார். எனக்கும் அவருக்கும் அப்படியொரு ஒப்பந்தம்.ராமநாமமே எல்லாம்.அதனை 24 மணிநேரமும் ஜெபியுங்கள். முடிந்த போதெல்லாம் அதுவே உங்களைக் காக்கும்என்பது தன்னுடைய பக்தர்களுக்கு பகவான் யோகி ராம்சுரத்குமார் அளித்த அருளுரை.

 

பகவான் யோகி ராம்சுரத்குமார்.     பகுதி - 2

 

திருவண்ணாமலையில் வாழ்ந்த அற்புத மகான். மலையே சிவமெனத் திகழும் திருவண்ணாமலை, எத்தனையோ மகான்களை இந்த உலகுக்கு உணர்த்தியிருக்கிறது. அப்படி திருவண்ணாமலை உணர்த்தி உலகுக்கு அருளிய மகான் பகவான் யோகி ராம்சுரத்குமார்.

 

தந்தை என்பவர் குருவுக்குச் சமானம். குரு என்பவர் தந்தைக்கு நிகரானவர். நமக்கு ஞானத்தை வழங்குபவர்கள் எல்லோரையுமே குருவுக்குச் சமமாகவே வணங்க வேண்டும். வித்தையைக் கற்றுக் கொடுப்பவர் தந்தை என்றே சொல்கிறது சாஸ்திரம். பகவான் யோகி ராம்சுரத்குமார், ‘எனக்கு மூன்று தந்தைகள்என்று தன்னுடைய குருமார்களைப் பற்றிச் சொல்கிறார். சுவாமி அரவிந்தர், பகவான் ரமண மகரிஷி, பப்பா ராம்தாஸ் சுவாமிகள் என மூவரும் பகவான் யோகி ராம்சுரத்குமார் எனும் மகானின் வாழ்வில், வழிகாட்டியவர்கள். இவர் மகான் என அறிந்து உணர்ந்து, அதன்படி பகவான் யோகி ராம்சுரத்குமாரை வழிநடத்தியவர்கள்.

 

 திருவண்ணாமலையில், பகவான் யோகி ராம்சுரத்குமார் ஆஸ்ரமத்தில், அந்த மிக விஸ்தாரமான மண்டபத்தில், சுவாமி அரவிந்தர், பகவான் ரமண மகரிஷி, பப்பா ராம்தாஸ் சுவாமிகள் ஆகியோரின் படங்கள் வைக்கப்பட்டிருப்பதை இன்றைக்கும் பார்க்கலாம். தரிசிக்கலாம்!

 

1952ம் வருடம். ராம்சுரத் குன்வர் கொஞ்சம் கொஞ்சமாக யோகியாக, மகானாக வெளியுலகுக்கு தெரியத் தொடங்கிய காலம் அது.

 

பகவான் யோகி ராம்சுரத்குமார், 1952ம் வருடத்தில் நிகழ்ந்ததை பின்னாளில் சொன்னார் இப்படி.

 

'This Beggar is No Mind.

 

No Thinking.

 

No Planning.

 

No Conscious.

 

No Sense Of Right And Wrong.

 

No Sense Of Good and Evil.

 

All Washed away'.

 

அதாவது, ’இந்தப் பிச்சைக்காரனிடம் எந்த எண்ணமும் இல்லை. எந்தச் சிந்தனையும் இல்லை. எந்தத் திட்டமிடலும் இல்லை. அதேசமயம், பிரக்ஞையும் இல்லை. சரியுமில்லை; தவறுமில்லை. நல்லதுமில்லை; கெட்டதுமில்லை. அனைத்துமே துடைக்கப்பட்டன..’. என்கிறார் பகவான் யோகி ராம்சுரத்குமார். .

 

சரி... அதென்ன பிச்சைக்காரன்?

 

பகவான் யோகி ராம்சுரத்குமார்  -   பகுதி - 3*         

   அதென்ன பிச்சைக்காரன்?

 

ராம்சுரத் குன்வர், ஆனந்தாஸ்ரமத்தில்... பப்பா ராம்தாஸ் சுவாமிகளின் அறிவுரைப்படியும் அருளியபடியும்ஸ்ரீராம் ஜெய்ராம்... ஜெய ஜெய ராம்...’ எனும் ராமநாமத்தை உள்ளே சொல்லியபடியே இருந்தார். ஏழு நாட்கள், ஏழு இரவுகள், ஏழு பகற்பொழுதுகள் என்று மோனநிலையில் இருந்தபடியே ராமநாமத்தில் இருந்தார்.

 

அதையடுத்து, ஆனந்தாஸ்ரமத்தில் இருந்த சிலருக்கு, கொஞ்சம் எரிச்சலோ இயலாமையோ... ராம்சுரத் குன்வரின் செயல்பாடுகள், மிகவும் தொந்தரவாக இருப்பதாக, பப்பா ராம்தாஸ் சுவாமிகளிடம் புகார் போல் தெரிவித்தார்கள். அங்கே ஏதும் அறியாத நிலையில், மோன நிலையில் இருந்த ராம்சுரத் குன்வரையும் புகார் கொடுத்தவர்களையும் மாறி மாறிப் பார்த்தார் பப்பா சுவாமிகள்.

 

ராம்சுரத் குன்வரை அழைத்தார். ‘நீ கிளம்பலாம்என்றார். அதைக் கேட்டு அதிர்ந்து போனார் ராம்சுரத் குன்வர்.

 

எங்கே கிளம்புவது? எங்கே செல்வது? எனக்கு வாழவே தெரியாது. பிச்சைதான் எடுக்கவேண்டும்என்று சுவாமிகளிடம் தெரிவித்தார் ராம்சுரத்குன்வர்.

 

பிச்சை எடு. நீ பிச்சைக்காரன் தான்.’ என்றார் பப்பா ராம்தாஸ் சுவாமிகள்.

 

அங்கே சிறிதுநேரம் மெளனம். பிறகு சுவாமிகளே தொடர்ந்தார்.

 

ஒன்றைத் தெரிந்து கொள், மிகப்பெரிய மரத்துக்குக் கீழே இன்னொரு மரம் வளராது. வளரமுடியாது. மரத்துக்குக் கீழே, புல்லும்பூண்டும்தான் வளரும். புரிகிறதா?’ என்று கேட்டார். புரிகிறது என்பது போல் தலையசைத்தார் ராம்சுரத் குன்வர். *ஆமாம் உன்னை பிச்சை எடு என்று சொல்லிவிட்டேன் எங்கே செல்லப் போகிறாய்?’   என்று அடுத்த கேள்வி கேட்டார் சுவாமிகள். சட்டென்று பதில் சொன்னார்... ‘அருணாசலம்என்று அவர் சொன்ன அருணாசலம்... திருவண்ணாமலை.

 

ராம்சுரத் குன்வரின் பதிலைக் கேட்டு, மகிழ்ந்து போனார் சுவாமிகள். அவரை ஆசீர்வதித்தவர், தன் தோளில் இருந்தவுல்லன் சால்வையை அவர் தோளில் அணிவித்தார். ‘இது உன்னுடனே இருக்கட்டும். எனக்கு மிகுந்த மகிழ்ச்சிஎன அருளினார் பப்பா ராம்தாஸ் சுவாமிகள்.

 

அந்த சால்வையை எப்போதும் அணிந்து கொண்டே இருந்தார் ராம்சுரத் குன்வர். பகவான் யோகி ராம்சுரத்குமார் என்று உலகத்தாரால் அறியப்பட்டு, வணங்கி வந்த வேளையிலும் அவரிடம் பப்பா ராம்தாஸ் சுவாமிகள் வழங்கிய சால்வை தோளில் இருந்தது. எல்லாத் தருணங்களிலும் அந்தச் சால்வையைப் போர்த்திக் கொண்டே எல்லா இடங்களுக்கும் வலம் வந்தார் பகவான் யோகி ராம்சுரத்குமார்.

 

.பகவான் யோகி ராம்சுரத்குமார் 102வது ஜெயந்தி நன்னாள். இந்த நாளில், பகவான் யோகி ராம்சுரத்குமாரை வணங்குவோம். யோகி ராம்சுரத்குமார் சதாசர்வ காலமும் உச்சரித்துக் கொண்டிருந்தஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம்எனும் எளிய வாசகத்தை மந்திரமெனச் சொல்லுவோம். ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம்.

 

யோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார் ஜெயகுரு ராயா.


-- விவேகானந்தன்


Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி