ஒரு போட்டோ போதும்:

 


ஒரு போட்டோ போதும்: அவரோடு மொத்த ஜாதகமும் நம்ம கையில - FACETAGR ஆப் அறிமுகம்.! எங்கு தெரியுமா?


இப்போது வரும் சில ஆப் வசதிகள் மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் நாம் கஷ்டப்பட்டு செய்யும் வேலைகளை மிக சுலபமாக முடித்து விடுகிறது இந்த ஆப் வசதிகள்.


அதன்படி சந்தேகப்படும் நபரை புகைப்படம் எடுத்தால், உடனே அவர், பழைய குற்றவாளியா அல்லது சாதாரண நபர் தானா என்பதை FACETAGR எனும் மொபைல் செயலி மூலம் கண்டறியமுடியும்.


அதாவது திண்டுக்கல் மாவட்டம் எல்லைக்கு உட்பட்ட காவல்நிலைய ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் என 60 நபர்களுக்கு FACETAGR செயலி பற்றிய பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளி ப்ரியா, கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், துணைக் கண்காணிப்பாளர் என உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.



பின்பு பயிற்சி வகுப்பு பற்றி, மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இரவு நேரங்களில் ரோந்துப்பணியில் ஈடுபடும் போது, சந்தேகத்திற்கு இடமான நபர் என நினைத்தால், உடனே தனது மொபைலில் உள்ள FACETAGR செயலியின் மூலம் அந்த நபரை புகைப்படம் எடுத்தால்,அவர் மீது ஏற்கனவே குற்ற வழக்குகள் ஏதும் உள்ளதா என அச்செயலி ஒப்பிட்டுக்காட்டும்.


ஒருவேளை பழைய குற்றவாளிகாளக இருந்தாலும் இதன் மூலம் கண்டுபிடிக்க முடியும். அதேசமயம் சந்தேகத்திற்கு ஆளான நபர், குற்றவாளி இல்லையென்றால், அவரை உடனே விடுவிக்க முடியும். இந்த செயலி இரவு நேரம் மட்டுமல்லாமல், 24 மணி நேரமும் ரோந்துப்பணியில் ஈடுபடும் காவல்துறையினருக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


குறிப்பாக சட்டம் ஒழுங்குப் பிரச்சனை ஏற்படும் இடங்களுக்கு செல்லும் காவல்துறையினர், அங்கு பிரச்சனையில் ஈடுபடும் நபர் மீது ஏற்கனவே குற்ற வழக்குகள் உள்ளனவா என உடனடியாக அறிந்துகொள்ள FACETAGR செயலி உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுவரை சென்னை மாநகர காவல்துறையினர் மட்டுமே பயன்படுத்தி வந்த இந்த செயலி, தென் மாவட்டங்களில் திண்டுக்கல் மாவட்டத்தில் தான் முதன் முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது. பின்பு அருகே உள்ள மாவட்டங்களின் குற்றவாளிகளின் விவரங்களும் இந்த செயலியில் அப்டேட் செய்யப்பட்டிருப்பதால், குற்றவாளிகளை விரைவாக அடையாளம் காண உதவும் எனவும் கூறப்படுகிறது. குறிப்பாக FACETAGR செயலி ஆனது முழுக்க முழுக்க காவல்துறையினருக்கானது. எனவே மக்கள் யாரும் இந்த செயலியை பயன்படுத்த இயலாது.

Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி