பாடி பில்டர் சாம்பியன் கிரண் டெம்ப்லா

 தெலுங்கானா ,மாநிலம் ஐதராபாத்தை பூர்விகமாக கொண்டவர் கிரண் டெம்ப்லா ( வயது 45).  இவர் ஒரு பாடி பில்டர் சாம்பியன் ஆவார். உடற்பயிற்சி பயிற்சியாளராகவும் உள்ளார். 45 வயதான கிரண் பிரபலங்களுக்கான உடற்பயிற்சி பயிற்சியாளராகவும் உள்ளார், மேலும் அவரது வாடிக்கையாளர் பட்டியலில் தமன்னா மற்றும் அனுஷ்கா ஷெட்டி ஆகியோர் அடங்குவர்.



ஐதராபாத்தைச் சேர்ந்த மிகச் சில பெண்களில் இவர் சிக்ஸ் பேக் உடலைக் கொண்டவர்களில் ஒருவர் ஆவார். ஹங்கேரி நாட்டின்  புடாபெஸ்டில் நடந்த உலக உடற்கட்டமைப்பு சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா  நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தி உள்ளார்.

அவரது சாதனைப் பட்டியல் இதோடு முடியவில்லை. அவர் மலையேறுபவர் ஆவார். அவர் இதுவரை மூன்று முறை எவரெஸ்ட் அடிப்படை முகாமுக்கு சென்று வந்து உள்ளார்.

33 வயதில் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக  இருந்தார், அவரது கணவர்   ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிந்தார். அப்போது ஒரு நாள் அவர் மூளையில் இரத்த உறைவு இருப்பது கண்டறியப்பட்டது. அதில் இருந்து அவரது வாழ்க்கை முறையே மாறி விட்டது.

அதில் இருந்து அவர் எப்படி மீண்டு சாதனை புரிந்தார் என்பதை அவரே விளக்குகிறார்.

நான் அதிர்ச்சியடைந்தேன், என் கணவரும் அப்படித்தான். நான் கண்ணாடியைப் பார்த்து, கடந்த தசாப்தத்தில் நான் எவ்வளவு மாறிவிட்டேன் என்பதை உணர்ந்தேன்.    நான் என் வாழ்க்கையில் அடுத்து என்ன செய்ய முடியும்  என்று யோசித்தேன். சிகிச்சைக்கு பின் என் உடல்  எடை அதிகமானது. நான் அப்போது 75 கிலோ எடையில் இருந்தேன்.

எனது நோயிலிருந்து நான் குணமடைந்த உடனேயே, 2007 ஆம் ஆண்டில், எனது சில நண்பர்களுடன் யோகா வகுப்புகளில் கலந்துகொள்ள ஆரம்பித்தேன்.

இது ஜிம்மில் சேர என் ஆர்வத்தைத் அதிகரித்தது. நான் என் வீடு அருகே உள்ள ஒரு உடற்பயிற்சி கூடத்திற்கு செல்ல ஆரம்பித்தேன், 6-7 மாதங்களில், 24 கிலோவை குறைக்க  முடிந்தது.  இளமையாக உணர அவ்வளவு அருமையாக இருந்தது என்பது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. நான் ஒரு உடற்பயிற்சி பயிற்சியாளராக ஆக  படித்தேன். 2008 இல் பேகம்பேட்டில் எனது சொந்த உடற்பயிற்சி கூடத்தைத் திறந்தேன்.

நடிகர் ராம் சரணின் மனைவியான உப்சனா கம்மினேனிக்கு  பயிற்சி அளித்தேன். தொடர்ந்து மிர்ச்சி மற்றும் பாகுபாலிக்கு தமன்னா மற்றும் அனுஷ்கா ஷெட்டிக்கு பயிற்சி அளித்தேன். அதற்குள், நான் ஒரு பிரபல உடற்பயிற்சி பயிற்சியாளராக அங்கீகாரம் பெறத் தொடங்கினேன். ராஜமவுலி, பிரகாஷ் ராஜ் மற்றும் இன்னும் சிலரும் எனது வாடிக்கையாளர்களாக இருக்கிறார்கள் என கூறினார்.

இந்த ஆண்டில் இணையததில் அதிகம் வைரலான புகைப்படம் என்றால் அதில் இவரது புகைப்படமும் அடங்கும். ஆண்கள் மட்டுமே கட்டுமஸ்தான உடலமைப்பு கொண்டிருக்க வேண்டும் எனும் ஒற்றை வரியை உடைத்தெறிந்தவர் கிரண் டெம்ப்லா.

Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி