ரமண மகரிஷி

 ரமண மகரிஷி

 ரமண மகரிஷி அவர்களைப்பற்றிய தொடர் இன்று முதல் தினம்


     தொடரை வழங்குபவர் திரு முருக சண்முகம்

பகுதி  (1 

: வாழ்வு என்பது தவம்.

 தன்னை அறிவது ஆன்மீகம்.



 நாம் எல்லோரும் ஆலயம் செல்கிறோம்.  ஆலயத்தில் உள்ள இறைவனை வணங்குகிறோம். மீண்டும் திரும்பி வீட்டுக்கு வருகிறோம்.


 "இவர் மட்டும் இதற்கு விதி விலக்கு".


 இந்த உலகில்,  தன்னுடைய இளம் வயதிலேயே 1896 ஆம் ஆண்டு திருவண்ணாமலை வந்து அருணாச்சல ஈஸ்வரரை தரிசிக்க வேண்டுமென்று வீட்டிலிருந்து கிளம்பினார். திருவண்ணாமலை வந்து இறைவனைக்  கண்ட பின்னர், தன் வீடு,  பெற்றோர் உறவினர்கள்  என்பதைப்  பற்றி நினைவே  இல்லாமல் திருவண்ணாமலையில் தங்கி விடுகிறார். தன் வாழ்நாள் முழுவதும் திருவண்ணாமலையில் பரம்பொருளின் நினைவாகவே இருந்த மகான் தான் வேங்கடராமன் என்கின்ற ரமணரிஷி அவர்கள்.


 

 பூரண நிலவாய்  தன் முகத்தில்,  பிரகாசம் கொண்டு, தன்னை தரிசிக்க வரும் மக்களின் வாழ்வில் இருந்த  இருளை  நீக்கிய பகவான்.

 இரமண மகரிஷி.


 ரமணர்  அவர்களின் பரிபூரண வாழ்வில் நடந்த சில  நிகழ்வுகளை சில நாட்கள் பதிவிடலாம் என்று நினைக்கின்றேன்.


 அதற்கு முன்,  நான் திருவண்ணாமலை சென்ற முதல்  நிகழ்வினை  இங்கு குறிப்பிடுகிறேன்.


காஞ்சிபுரம் மாவட்டம், அச்சரப்பாக்கம் அருகிலுள்ள எலப்பாக்கத்தில் கூட்டுறவுத்துறையில் இளநிலை ஆய்வாளராக  பணி புரிந்தபோது,  எனது இனிய நண்பர்,  எலப்பாக்கம் சவுத் இந்தியன் வங்கியில் பணிபுரிந்த சாய்நாத் என்பவருடன் சேர்ந்து  1986 ஆம் ஆண்டு கார்த்திகை தீபம் அன்று முதன்முதலாக சென்றோம்.


 ரமண மகரிஷி அவர்களின் மடத்திலிருந்து தான் தான் நாங்கள் இருவரும் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கார்த்திகை தீபம் பார்த்தோம்.


 கார்த்திகை தீபமான  இந்நாளில்,  ரமணரைப் பற்றி பதிவிடுவதில் நான் அகமகிழ்கிறேன்.


1879 ஆம் ஆண்டு டிசம்பர் 30 ஆருத்ரா தரிசன நாள், திருச்சுழியில் சுந்தரம்  அய்யருக்கும், அழகம்மாளுக்கும்  பிறந்த ஆன்மிகப் பேரொளி. இவரது இயற்பெயர் வேங்கடராமன்.


 சுந்தரம் ஐயர் அந்த ஊரிலேயே மிகவும் பிரபலமானவர்.  இதனால் அவர்கள் வீட்டிற்கு அடிக்கடி ஊர் பெரியவர்கள் வந்து போவார்கள்.


 சுந்தரம் ஐயர் அப்படி வட்டாரத்தில் மிக முக்கிய பிரமுகராக இருந்தாலும், அவருடைய குடும்பத்தின் மீது ஒரு சாபம் இருந்ததாகச் சொல்வார்கள். அவர்கள் மூதாட்டி ஒருவர் பசியோடு வந்த துறவிக்கு உணவளிக்க மறுத்து விட்டதால்,அந்தத் துறவி வெகுண்டு  உன் குடும்பத்தில் தலைமுறைதோறும் ஒருவர் சன்னியாசி ஆகட்டும் என்று சபித்து விட்டாராம். சுந்தரம் ஐயரின் தந்தை வழி மாமாக்கள் காவி உடுத்தி தண்டமும் கமண்டலமுடன்  வெளியேறி இருக்கிறார்கள்.மூத்த சகோதரரும்  தீர்த்த யாத்திரை சென்றவர் அப்படியே சந்நியாசி ஆகிவிட்டார். தம்முடைய சொந்த குடும்பத்திலும் அப்படி நடக்கப் போகிறதென்று சுந்தரம் அவர்கள் நினைத்துக்கூட பார்த்ததில்லை.


வேங்கடராமனுக்கு அண்ணன் நாகசுவாமி,  தம்பி நாகசுந்தரம், தங்கை அலமேலு ஆகியோர்.


 தந்தை சுந்தரம் அய்யர் காலமான போது,  வெங்கட்ராமனுக்கு வயது 12.


 இதனால் குடும்பம் இன்னலுற்றதால்,  மதுரையிலிருந்த மாமா சுப்பையர் பிள்ளைகளை மதுரைக்கு  அழைத்து வந்தார்.


 வேங்கடராமனின் ஞாபக சக்தி அபாரமானது பாடங்களை ஒரு முறை கேட்டால் போதும் அப்படியே திரும்பி சொல்லி விடுவார்.தனது வயது ஒத்தவர்களிடம் இல்லாத ஒரு வினோதப் பழக்கம் வேங்கடராமனிடம் இருந்தது.  திடீரென்று அயர்ந்து தூங்கிவிடுவார்.


 தன்னுடைய ஆழ்ந்த உறக்கம் ஆன்மீகத்தில் விழிப்புநிலை என கருதிக் கொள்வார் வேங்கடராமன்.



 ஒரு புனிதத்தலம் என்கிற அளவில் மட்டுமே திருவண்ணாமலை பற்றித்  தெரிந்தது அவருக்கு. அன்று திருச்சியிலிருந்து உறவுக்காரர் ஒருவர் வந்திருந்தார். மாமா நீங்க எங்கிருந்து வர்றீங்க என்று கேட்டார். அருணாசலத்திலிருந்து என்றார் அவர். என்னது அருணாச்சலத்தில்  இருந்தா அது எங்கேயென  வியப்புடன் கேட்க  அதான்டா அண்ணாமலை என்றவர்  பதிலளிக்க அதுபற்றி தமக்கு தெரிந்தவைகளை  விவரித்தார் அந்த  சிறுவனாகிய வெங்கட்ராமனுக்கு அருணாச்சலம் தோற்றுவித்த முன்னறிவிப்பு அதுதான்.


 வேங்கடராமனின்  அடுத்த திட்டம் நாளை பதிவில்.

--முருக சண்முகம்




Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி