கோப்பையை தூக்கிக் கொடுத்த கேப்டன் கோலி.. "தமிழில் பேசிய நடராஜன்
கோப்பையை தூக்கிக் கொடுத்த கேப்டன் கோலி.. "தமிழில் பேசிய நடராஜன்
ஸ்திரேலிய அணிக்கு எதிராக சிறப்பாக ஆடிய நடராஜனிடம் இந்திய அணியின் கேப்டன் கோலி தொடர் கோப்பையை கொடுத்துள்ளார். இதன்பின் தமிழக வீரர் நடராஜன் தமிழில் உரையாற்றினார். இந்தியாவிற்கு எதிரான 3வது டி 20 போட்டியில் ஆஸ்திரேலிய வெற்றி பெற்றது. இந்தியா 20 ஓவர் முடிவில் 144/4 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்தியாவை வீழ்த்தி ஆஸி. 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் டி 20 தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது.
இந்த தொடரில் சிறப்பாக ஆடிய ஹர்திக் பாண்டியாவிற்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது. ஆனால் இந்த விருதை ஹர்திக் பாண்டியா தமிழக வீரர் நடராஜனிடம் கொடுத்தார். அவர்தான் விருதுக்கு தகுதியானவர் என்று கூறி நடராஜனுக்கு பாண்டியா கோப்பையை கொடுத்தார். அதேபோல் கேப்டன் கோலியும் டி 20 தொடருக்கான டெட்டால் கோப்பையை நடராஜனிடம் கொடுத்தார்.
இந்த போட்டிக்கு பின் தமிழக வீரர் நடராஜன் சோனி தொலைக்காட்சியில் தமிழில் பேசினார். முன்னாள் இந்திய வீரர் முரளி கார்த்தியிடம் நடராஜன் தமிழில் உரையாற்றினார். அதில், ஆஸ்திரேலியா வந்து.. ஒரு மிக சிறப்பான டீம் கூட ஆடி முதல் தொடரிலேயே இப்படி வெற்றிபெறுவது பெரிய மகிழ்ச்சி அளிக்கிறது. இதை பற்றி சொல்வதற்கே வார்த்தை இல்லை. ரொம்ப சந்தோசமா இருக்கேன்.
நான் எதுவும் பெரிதாக எதிர்பார்க்கவில்லை. எனக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்ய வேண்டும் என்று நினைத்ததேன். சில வீரர்களுக்கு காயம் காரணமாக எனக்கு வாய்ப்பு கிடைத்தது. நான் நெட் பவுலராகவே வந்தேன். என்னுடைய ஆட்டத்தை மேம்படுத்த வேண்டும் என்று நினைத்தேன்.
ஐபிஎல் தொடரில் நல்ல பார்மில் இருந்தேன். அது எனக்கு உதவியாக இருந்தது. இங்கு சக வீரர்கள் எனக்கு பெரிய அளவில் ஆதரவாக இருந்தனர். என்னை எல்லோரும் ஊக்குவித்தனர். எனக்கு அது பெரிய நம்பிக்கை கொடுத்தது.
நான் எனது யார்க்கர் மீது நம்பிக்கை வைத்து இருந்தேன். பிட்சிற்கு ஏற்றபடி பவுலிங் செய்தேன். கேப்டன், கீப்பர் சொன்னபடி கேட்டேன். வேறு மாற்றம் எதுவும் செய்யவில்லை. ஐபிஎல்லில் ஆடியபடியே ஆடினேன். நான் சின்ன வயதில் இருந்து விக்கெட் எடுத்தால் கத்தியது இல்லை. சிரித்துவிட்டு கடந்துவிடுவேன், கிரிக்கெட் ஆட தொடங்கியதில் இருந்தே அப்படித்தான் என்று நடராஜன் தமிழில் பேட்டி அளித்துள்ளார்.
Comments